
யாழ். கொட்டடியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சுந்தரலெட்சுமி சுப்ரமணியம் அவர்கள் நேற்று (23/09/2013) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லதம்பி (ஆசிரியர்) வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும்.
காலஞ்சென்றவர்களான முருகேசு தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்.
காலஞ்சென்ற சுப்பிரமணியத்தின் அன்புமனைவியும்.
காலஞ்சென்ற தனபாலசிங்கம் (வைத்தியர்), குணபாலசிங்கம், சிவபாலசிங்கம் (பொறியியலாளர்), ஜெயபாலசிங்கம் (ஆஸ்திரேலியா), காலஞ்சென்ற பூபாலசிங்கம் (மாநகரசபை உத்தியோகத்தர்), ஸ்ரீபாலன், கிருஷ்ணபாலன், காலஞ்சென்ற தெய்வேந்திரபாலா மற்றும் நாகேந்திரபாலா (லண்டன்) ஆகியோரின் அன்புத்தயருமாவர்.
அன்னாரின் அருதிக்கிரியைகள் நாளை (25/09/2013) புதன்கிழமை மு.ப. 11 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக வில்லூன்றி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: சு. ஸ்ரீபாலன். +94 212 229 988
#79 மீனாட்சி அம்மன் வீதி, பண்ணை, யாழ்ப்பாணம்.
Date of Death | Place of Death | Date of Birth | Place of Birth |
---|---|---|---|
Mon, 23/09/2013 | யாழ். கொட்டடி | நயினாதீவு |