Mrs. Jegathambikai Paramalinkam

திருமதி. ஜெகதாம்பிகை பரமலிங்கம்

நயினாதீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. பரமலிங்கம் ஜெகதாம்பிகை அவர்கள் 29/06/2013 சனிக்கிழமை நயினாதீவில் காலமானார்
அன்னார் அமரர்களான நாகமுத்து (சி நா) நாகலெட்சுமி அவர்களின் அருமை மகளாரும்

அமரர்களான பொன்னம்பலம் வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்

பரமலிங்கம் (சிவங்கண்டு) அவர்களின் பாசமிகு மனைவியும்.

வைகுந்தவாசன் (பிரான்ஸ்) பிறைசாந்தி (லண்டன்) ஆகியோரின் ஆருயிர் தாயாரும்.

மனோகரன் (லண்டன்) பிரியதர்சினி (பிரான்ஸ்) ஆகியோரின் அருமை மாமியாரும்

பபிதா, சயிதா, தீரன் (லண்டன்) கவிசன், வினுசன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பேத்தியும்

காலம்சென்றவர்களான முத்தையா, மதியாபரணம் மற்றும் சண்முகநாதன் (இந்தியா) நாகராசா, மகேஸ்வரி, பரமேஸ்வரி, கனகாம்பிகை (கனடா) ஆகியோரின் ஆருயிர் சகோதரியும்.

தவமணி (பிரான்ஸ்) செல்லம்மா (கனடா) கைலாசநாதன் (சட்டத்தரணி - கனடா) நித்தியலெட்சுமி (பிரான்ஸ்) குகநாதன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.

அன்னாரின் இறுதி கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல் குடும்பத்தினர் - 8ம் வட்டாரம் நயினாதீவு.

தொடர்புகளுக்கு
+94 213 001 909 & +94 213 001 910 (இலங்கை)
வைகுந்தவாசன் (பிரான்ஸ்) : +33 143 025 303
மனோகரன் (லண்டன்) : +44 208 949 9221

Posted on 29/06/13 & edited 10/12/14 @ Nainativu, LK