புங்குடுதீவில் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட சிறுமி வித்தியாவின் கொலைக் கண்டித்து, கொலையாளிகளுக்கு அதிக பட்ச தண்டணை வழங்க கோரியும், சுவிஸ் கொலையாளியை தப்பிக்க வைத்த சட்டத்தரணிக்கு எதிராகவும், நயினாதீவு பிரதேசத்தில் அதிகாலை தொடக்கம் போக்கு வரத்துக்களை தடை செய்தும், பூரண கடையடைப்புக்களை மேற்கொண்டும் மக்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
மற்றும் பாடசாலைகளைப் பகிஷ்கரித்து மாணவர்களும், தபாலகம், பிரதேச சபை என்பனவும் தங்களின் பூரண ஆதரவை வழங்கியுள்ளனர்.
நயினாதீவு பிரதேசம் வெறிச்சோடிக்காணப்படுகின்றது.
Source: