நயினை மண்ணின் மக்கள் மாணவர்கள் தேவை கருதி பணியாற்றும் நயினாதீவு அபிவிருத்தி கழகம் சுவிசர்லாந்து

[ Photo courtesy : Nayinai Kumaran ]
நயினாதீவின் மக்களின் அன்றாட தேவையான குடிநீர் மற்றும் கல்வி போன்றவற்றில் மிகவும் அக்கறையுடனும் அவதானத்துடனும் செயல்படும் நயினாதீவு அபிவிருத்தி கழகம் சுவிசர்லாந்து. அண்மையில் நயினாதீவுக்கு விஜயம் மேற்கொண்ட கழக செயலாளர் .திருவாளர் சு .உதயபாரதலிங்கம் அவர்களும் நயினாதீவின் ஒன்றிய அமைப்பாளர்
திருவாளர் மு .மகாலிங்கம் அவர்களும் இணைந்து நயினாதீவில் கல்வி கற்று அண்மையில் யாழ் பல்கலைக் கழகத்திற்கு தெரிவான 4 மாணவர்களுக்கு தலா 25,000 ரூபா விகிதம் 100,000ரூபா நிதி உதவியினை வழங்குவதையும்
மற்றும் குடிநீர் வளாக அபிவிருத்தி மற்றும் கழகத்தால் அமைக்கப்பட்ட நயினாதீவு மகாவித்தியாலய விளையாட்டு மைதானம் மற்றும் நாகபூசணி வித்தியாலயம் ,கணேஷ கனிஸ்ட மகாவித்தியாலயம் .மற்றும் கணேசா முன்பள்ளி செல்லம் முன்பள்ளி ஆசிரியர்கள் சம்மந்தமான பிரச்சனைகளையும் கேட்டறிந்தனர்.
மற்றும் நயினாதீவு மணிபல்லவ கலாமன்ற குடிநீர் வசதிக்கென குடிநீர் ராங்கி கட்டடம் அமைப்பதற்கு மன்ற செயலாளரிடம் ரூபா 50,000 வழங்கப்படுவதையும் இங்கு காணலாம்.
எம் ஊரின் வளர்சியில் பெரிதும் அக்கறையுடன் செயற்படும் நயினாதீவு அபிவிருத்தி கழகம் சுவிசர்லாந்து அமைப்புக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
Posted on 22/02/14 & edited 03/04/14 @ Nainativu, LK