நயினாதீவு பிரதேசசபைக்கு பேருந்து கையளிப்பு

[ Photo courtesy : Nayinai Kumaran ]

நயினாதீவு பிரதேசத்தின் உள்ளூர் போக்குவரத்துக் கென இ.போ.ச. ஒன்று பிரதேச மக்களிடம் கடந்த 16ம் திகதி சனிக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச சபை தவிசாளர் நயினாதீவு மக்களை சந்திக்க சென்ற வேலை, நயினாதீவு பிரதேசத்துக்கு பேருந்து ஒன்றை பெற்றுத் தருமாறு அவர்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

இதன்படி போக்குவரத்து அமைச்சரின் சிபாரிசின் படி நயினாதீவுக்கு இந்த இ.போ.ச. பேருந்து ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

நயினதீவிக்கு பேருந்தைக் கொண்டு செல்வதற்கு உரிய வசதிகள் இல்லாமையால் பல மாதங்களின் பின்னர் நயினாதீவுக்கு தற்போது அமைக்கப்பட்டுள்ள கடற்ப்பதையினுடாக எடுத்து வரப்பட்டு அது கடந்த சனிக்கிழமை பிரதேச மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Posted on 24/11/13 & edited 24/11/13 @ ,