நயினாதீவு - ஆலங்குளம் வீதி புனரமைப்பின் ஆரம்ப நிகழ்வு.

யாழ்ப்பாணம்-நயினாதீவு –ஆலங்குளம் வீதியின் புனரமைப்புக்கான ஆரம்ப நிகழ்வு இன்று 7 ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு வட,கிழக்கு மாகாண காணியமைச்சின் மேலதிக செயலாளரும் நயினாதீவு சமூக பொருளாதார கல்வி கலாசார அபிவிருதிச்சங்கத்தின் தலைவருமான ப.க.பரமலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வுக்கு யாழ் .மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ் பிரதம விருந்த்தினராக கலந்துகொள்ளவுள்ளதுடன், சிறப்புவிருந்தினராக யாழ்ப்பாண உள்ளூராட்சித் திணைக்கள உதவி ஆணையாளர் கோ.இராசையா கலந்து கொள்ளவுள்ளார்.

எதிவரும் நயினாதீவு நாகபூஷிணியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்துக்கு முன்னர் இவ் வீதி திருத்தப்பட்டு மக்களின் பாவனைக்காக திறந்து விடப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

தினக்குரல் – 07/04/2005

Posted on 07/04/05 & edited 09/09/14 @ Nainativu, LK