நயினாதீவு ஆலங்குளம் விதீ 4 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு

நயினாதீவு சமூக, பொருளாதார, கல்வி கலாசார அபிவிருத்தி சங்ககத்தின் மாதாந்த நிறைவேற்றுக் குழுக் கூட்டம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. அக்கூட்டாதில் ஆலங்குளம் விதீ புனரமைப்பு சம்மந்தமாகவும் உடனடி தேவை பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது. இக்கூட்டதில் உரையாற்றிய சங்கத்தின் தலைவரும், வட- கிழக்கு மாகாண காணியமைச்சின் மேலதிகச் செயலாளருமான ப.க.பராமலிங்கம் பிரதான விதீயின் ஒரு பகுதி பாதுகாப்புக் காரணங்களுக்காகத் பாவனைக்குத் தடை செய்யப்பட்டுள்ளமையால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர் எனவும் இதனால் அம்பாள் ஆலயத்துக்கு செல்வதற்கோ அல்லது இறங்குதுறைக்குச் செல்வதற்கோ மேற்படி ஆலங்குளம் விதீயைத் தற்காலிகமாக மக்கள் பெரும் சிரமத்துடன் பாவித்து வருகின்றார்களெனத் தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில் எமது சங்கம் எடுத்த அயராத முயற்சியின் நிமித்தத்தினாலும் கிராம மக்களின் பங்களிப்புடனும் ஒருங்கிணைப்புடனும் இவ்வாண்டுத் திட்டதில் முதற்கட்டமாக ஆலங்குளம் விதீயை 20 அடி அகலத்தில் விஸ்தரிப்பதுடன் புனரமைப்பு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தர்.

இத் திட்டத்திற்கு சுமார் 40 இலாட்சம் ரூபாய் செலவாகும் எனவும் சித்திரை முதல் வாரத்தில் புனரமைப்பு ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் முன்பாக திறப்பதுக்கும் உரிய நடவடிக்கைகளை சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் பொறியிலாளருமாகியா நல்லையா செல்வநாதன் தலைமையில் சங்க உறுப்பினர்களைக் கொண்ட ஒருகுழு மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சங்கத்தின் செயற்பாடுகளை விரிவுப்படுதுவதற்கு நயினாதீவைச் சேர்ந்தவர்களை அங்கத்துவர்களாகக் கொண்டு வெளிநாடுகளில் இயங்கும் அமைப்பு ரீதியான நிறுவனங்களின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் அவசியமென மேற்படி கூட்டதில் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டது. அத்துடன், சங்கத்தின் 2005 ஆம் ஆண்டுத் திட்டத்தில் சீரான நன்னீர் விநியோகத் திட்டமொன்று அமுல்படுத்தபடவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டுத் திட்டதில் மேற்படி சங்கத்தினால் சுகாதார வசதிகளை மேம்படுதும் முகமாக நயினாதீவு அரசினர் வைத்தியசாலை பல இலட்சம் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்டதுடன் நிரந்தர முழுமையான மின்சார இணைப்பும், நயினாதீவு மகா வித்தியாலத்தின் வகுப்பறைகள் வர்ணம் பூசுவதற்காக 63,000 ரூபாவும் நயினாதீவு கணேசா கனிஷ்ட மகா வித்தியாலத்திற்கு காணி கொள்வனவிற்காகவும் நீர் விநியோகத்திற்குமாக 50,000 ரூபாவும் நயினாதீவு பிரதேச சபை உப அலுவலக நூல் நிலையத்திற்கு 50,000 ரூபா பெறுமதியான அலுமாரிகளும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தினக்குரல் -2005

Posted on 05/05/05 & edited 07/09/14 @ Colombo, LK