நயினாதீவு அருள்மிகு காட்டுக்கந்தன் ஆலய பாலஸ்தாபன நிகழ்வு

22/03/2015 அன்று இடம்பெற்று ஆலய திருப்பணி வேலைகளுக்காய் பழைய ஆலயம் இடிக்கப்பட்டு கருங்கல்லினால் ஆன மூலஸ்தானம் அமைப்பதற்கான அத்திவாரம் இடும் நிகழ்வு நாளை 03/04/2015 காலை 06:30 மணியளவில் இடம்பெறவுள்ளது.

எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய புலம் வாழும் நயினை மண் உறவுகளே நயினாதீவின் நடுவகாடு தன்னகத்தே வீற்றிருந்து அனைவருக்கும் அருள்அமுது பொழியும்
காட்டுக்கந்தன் ஆலய புனருத்தான திருப்பணி வேலைகள் நாளை ஆரம்பமாகின்றது.

எம் அன்புக்கினிய உறவுகளே ஆலய சூழலில் வாழ்ந்தவர்களே ஆலய கூட்டுப்பிராத்தனைகளை பங்கு கொண்டு இன்று புல தேசம் எங்கும் வாழும் உறவுகளே, உங்களுக்கு அருளாசி வழங்கிய உங்கள் காட்டுக்கந்தனை எங்கள் நாட்டுக்கந்தனை புதிய தோற்றக் கந்தனாக மாற்றி அமைக்க உங்கள் பூரண பங்களிப்பை வழங்க முன் வாருங்கள்.

முருகப் பெருமானிடம் உங்களால் இயன்றவற்றை கிள்ளி கொடுங்கள் உங்கள் வாழ் நாளில் அள்ளித்தருவான் வடிவேலன்.

நயினாதீவின் ஆலயங்கள் அழகு பொலிவு கண்டபோதும் நம் காட்டுக்கந்தன் காட்டில் வாழ்ந்தது போதும் தனக்கோர் படைவீடு கொண்டு புதுப் பொலிவுடன் மிளிர உங்களால்
இயன்ற பங்களிப்பை வழங்கி ஆலய வளர்ச்சிக்குப் பெரும் துணையாய் நில்லுங்கள்.

வருவான் முருகன் உங்கள் வாசலுக்கு.
ஓம் சரவண பவ.

Posted on 03/04/15 & edited 03/04/15 @ Nainativu, LK