நயினாதீவின் முன்பள்ளிகளுக்கு நயினாதீவு அபிவிருத்தி கழகம் பிரான்ஸ் நிதி உதவி

[ Photo courtesy : Nayinai Kumaran ]

நயினாதீவின் 3 முன்பள்ளிகளுக்கு நயினாதீவு அபிவிருத்தி கழகம் பிரான்ஸ் (ADNF). தங்களின் கழக நிதியத்தில் இருந்து வழங்கிய 315000 ரூபா நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்டுள்ள மலசலகூடம். இவ் நிகழ்வை அபிவிருத்தி கழக தலைவர் ப .செந்தில்குமரன் நேரில் சென்று பார்வையிடுவதையும் அவருடன் இக் கட்டிடங்களை அமைப்பதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கிய நயினாதீவு இணைப்பாளர் திரு .நா .யோகநாதன் . அவர்களையும் மற்றும் முன் பள்ளி ஆசிரியர்களையும் மாணவர்களையும் மற்றும் மாணவர்களுக்கு கழகத்தலைவர் இனிப்புப்பண்டம் வழங்குவதையும் இங்கே காணலாம்.
இது போன்ற பல அபிவிருத்தி வேலைகளை செய்துவரும் நயினாதீவு அபிவிருத்திக் கழகத்தினரை மனமுவந்து பாராட்டுகின்றோம். உங்கள் சேவை தொடர்ந்தும் எமது மண்ணுக்கும் மக்களுக்கும் தேவை என மனதார வாழ்த்துகின்றோம்.
நயினாதீவு முன்பள்ளிகளின் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள்.

Posted on 18/07/13 & edited 30/06/14 @ France, FR