நயினாதீவின் அபிவிருத்திக்கு சீடா நிறுவனம் நிதியுதவி

நயினாதீவில் நன்னீர்க் கிணறுகள் மலசலகூடங்கள் அமைப்பதற்கு கனடா சீடா நிறுவனதினால் நயினாதீவு சமூக பொருளாதார கல்வி கலாசார அபிவிருத்தி சங்கத்துக்கு நேரடியாக நிதி வழங்கப்பட்டுள்ளதாக மேற்படி சங்கத் தலைவரும் வட கிழக்கு மாகாண காணி அமைச்சின் மேலதிக செயலாளருமான ப.கா.பராமலிங்கம் கூறினார்.. இச்சங்கத்தின் மாதாந்த நிறைவேர்ருக் குழுக் கூட்டதிற்கு தலைமைதாங்கி உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் இவ்வாண்டிற்கான சங்கத்தின் செயற்திட்டாதில் 2 மில்லியன் ரூபா செலவில் நயினாதீவின் பிரதான வீதி ஆலங்குளம்வீதி1,ஆம்2ஆம் 3ஆம்குறுக்குதெருக்களுக்கு மின்னிணைப்புகளுடன் தெருவிளக்குகள் அமைத்து மாலை 7.00மணி முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை மின்சாரம் வழங்குவதற்கும் இச் செயற்திட்டதை எதிர்வரும் ஜூன் மாதம் நடை பெறவிருக்கும் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் திருவிழாவுக்கு முன்பாக நடைமுறைபாடுதுவதற்கு ஏதுவாக பொறியிலாளர் நல்லையா செல்வநாதன் தலைமையில் மூவரடங்கிய ஓர் குழு ஒழுங்கு செய்யப்படுள்ளது.

இதற்கான நிதி நன்கொடையர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படுமெனத்தெரிவித்த அவர் எமது நீண்ட கால வேண்டுகோளுக்கு இணங்க பிரதான வீதி 1ஆம் 2ஆம் குறுக்குதெருக்களைச் செப்பனிடுவதற்கு 4 மில்லியன் ரூபா சம்பந்தபட்ட அரச திணைக்களங்களினால் ஒதுக்கப்பட்டுள்ளது. நயினாதீவை வளமிக்க,செழிப்புமிக்க கிராமமாக மாற்றுவதற்கு எமது சங்கம் திடகாத்திரமான நடவடிக்கைகளை தொடர்ந்தும் எடுத்து வருமெனவும் அதற்கு நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒத்தழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Posted on 05/05/05 & edited 07/09/14 @ Colombo, LK