நயினாதீவின் அபிவிருத்திக்காக உருவாக்கப்பட்டுள்ள சங்கம்

தற்போதைய சமாதானச் சூழ்நிலையில் யாத்திரிகர்கள் அதிகளவில் செல்லும் ஒரு புனித இடமாக நயினாதீவு விளங்குவதாலும், நயினாதீவு வாழ் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதையும், அபிவிருத்தி செய்வதையும் நோக்கமாக கொண்டும் “ நயினாதீவு சமூக,பொருளாதார,கல்வி,கலாசார அபிவிருத்திசாங்கம்” என்ற அமைப்பு அண்மையில் கொழும்பில் அதன் அமைப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.

அதன் தலைவராக இந்துசமய கலாசார அமைச்சின் மேலதிக செயலாளர் ப.க.பரமலிங்கம் அவர்களும், உப தலைவர்களாக டாக்டர் தியாகர் திருநாவுக்காரசு, சட்டாதரணி ஆ.சி.குணரெத்தினம், டாக்டர் மு.கதிர்காமநாதன், சி.சிதம்பரநாதன், த.சச்சிதானந்தம்F.C.A, த.சிவானந்தம், சி.இரத்தினசபாபதி, அ.சர்வானந்தராஜா, ப,பரமேஸ்வரன் சட்டாதரணி ஆகியோரும், இணைச் செயலர்களாக ப.ந.உருதிரலிங்கம், நா.பஞ்சாட்சரம் ஆகியோரும், பொருளாளராக ஆர்.ஆர்.பி.ஸ்ரீதரசிங் அவர்களும், உப-பொருளாளராக வே.கருணாகரன், நயினாதீவு உப அங்கத்தவர்களாக சோ.தில்லைநாதன், கே.சரவானபவானந்தான், ச.கணேஸ்வரன் ஆகியோரும் செயற்குழு உறுப்பினர்களாக டாக்டர் ச.இராசரெத்தினம், டாக்டர் கு.நந்தகுமார், ப.க.மகாதேவா, திரு,பொ.திருச்செல்வம், ப.யோகராசா , மா.குலமணி, ந.செல்வநாதன், த.சதாசிவம், யோ.ஜயகாந், கா.அருட்செல்வம், நா.க.கார்த்திகேசு, ந.தயானந்தன், சு.கோபாலகிருஷ்ணன், இ.தவகுலரத்தினம், மு.பாலச்சந்திரன், டாக்டர் மனோரஞ்சன், கு,ஸ்ரீகாந்தராஜா ஆகியோரும் தெரிவு செய்யப்படனார்.

உலகில் பல பாகங்களிலும் வாழும் நயினாதீவு மக்களின் ஆதரவுடனும் மற்றும் அரச,அரச சார்பற்ற பொதுநிறுவனங்களின் உதவியுடன் குறுங்கால,நீண்டகால திட்டங்களை மேற்கொள்வதற்கு தீர்மானித்திருப்பதாகவும் தெரிவிக்கபட்டது.

தினக்குரல் -30/03/2003

Posted on 30/03/05 & edited 12/09/14 @ Colombo, LK