தரம் 5 புலமை பரீட்சை எடுக்கின்ற மாணவர்களுக்கு யாழ் நகரில் இருந்து திறைமை வாய்ந்த ஆசிரியர் முலம் பயிற்சி

நயினாதீவின் பாடசாலை மாணவர்களின் கல்வியில் அக்கறை கொண்டு ஊரின் மைந்தன் துரைராஜா துசாந்த் (UK) அவர்களால் உருவாக்கப்பட்ட நயினாதீவு கல்வி மற்றும் அபிவிருத்தி சங்கம் ஏற்பாட்டில் தரம் 5 புலமை பரீட்சை எடுக்கின்ற மாணவர்களுக்கு யாழ் நகரில் இருந்து திறைமை வாய்ந்த ஆசிரிய ஒருவரை வரவழைத்து மாணவர்களின் கல்வியில் சிறந்த பெறுபேறுகளை அடைவதற்கு தனது சொந்த நிதியில் இருந்து பயிற்ச்சி புத்தகங்கள் மற்றும் ஆசிரியருக்கான கொடுப்பனவுகள் வழங்கும் இந்த நயினை மண்ணின் மைந்தனை நாம் மனதார வாழ்த்துகின்றோம்.
இவரின் இவ் முயற்சியினை அவரின் ஏற்பாட்டுக்குழுவினர் (24/01/2014) அன்று நயினாதீவு நாகபூஷணி வித்தியாலயத்தில் இனிதே ஆரம்பித்து வைத்துள்ளனர்.
இவ் ஆசிரியருக்கு உதவியாக யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள் இருவரும் இணைந்து கல்வி வளர்ச்சியினை மேலும் முன்னகர்த்தி செல்கின்றனர் இவ் கல்விப்பணி தொடர வாழ்த்துகின்றோம்.

Posted on 28/01/14 & edited 28/01/14 @ ,