தம்பகைப்பதி பத்திரகாளி சமேத ஸ்ரீ வீரபத்திரப்பெருமானின் தேர் தரிப்பிட திருப்பணி வேலைகள் யாவும் பூரணமாக நிறைவேற்றம்

புலம் வாழ் நயினை உறவுகளின் நிதிப்பங்களிப்பில் உருவாக்கப்பட்ட நயினாதீவு தம்பகைப்பதி பத்திரகாளி சமேத ஸ்ரீ வீரபத்திரப்பெருமானின் தேர் தரிப்பிடம் ஆலய உயர் திருவிழாவின் தேர் திருவிழாவின் போது திறந்து வைக்கப்பட்டது.

திப்பணி வேலைகளை பூரணமாக நிறைவேற்ற கால அவகாசம் போதாமையால் தற்போது இத் திருப்பணி வேலைகள் யாவும் பூரணமாக நிறைவேற்றப் பட்டுள்ளது.
இவ் திருப்பணி வேலைகளை நிறைவேற்றி வைப்பதற்கு அயராது நிதி வசூலித்து உதவிய நடராசா நீலவண்ணன் (கனடா) அவர்களுக்கும் விக்கி தில்லை (கனடா) அவர்களுக்கும், வேலைகளுக்கு நிதிப்பங்களிப்பு வழங்கிய புலம் வாழும் மற்றும் நம் ஊர் வாழ் உறவுகளுக்கு எமது பலகோடி நன்றிகள்.

உங்கள் உதவியால் உயர்ந்து நிற்கும் இந்த அழகிய தேர் தரிப்பிடத்தை உருவாக்க சகலவழிகளிலும் தோளோடு தோள் நின்று உதவிய அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

நீங்கள் வழங்கிய நிதி பங்களிப்பின் கணக்கறிக்கைகள் யாவும் விரைவில் வெளிவரயுள்ளது என்பதையும் தெரிவிப்பதோடு

அனைவருக்கும்
எமது ஆலயத்தின் சார்பான நன்றிகள்
நயினாதீவு தம்பகைப்பதி பத்திரகாளிஅம்பாள் சமேத
ஸ்ரீ வீரபத்திரர் ஆலயம்.

Posted on 01/12/14 & edited 01/12/14 @ Nainativu, LK