கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் நயினாதீவில் ஆரம்பிக்கப்படும்.

- வட கிழக்கு மாகாண காணி அமைச்சின் செயலாளர்
தீவுப் பகுதி மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்குடன் வெளிநாட்டு நிருவானமொன்றின் அனுசரணையுடன் தேசிய நீர் வழங்கல் அதிகார சபை கடல் நீரை நன்னீராக்கும் பாரிய திட்டத்தை நடைமுறைபடுத்தவிருப்பதாக நயினாதீவு சமூக பொருளாதார கல்வி கலாசார அபிவிருத்கி சங்கத்தின் தலைவரும் வட கிழக்கு மாகாண சபை காணி அமைச்சின் செயலாளருமாகிய ப.க.பரமலிங்கம் தெரிவித்தார்.

சங்கத்தின் மாதாந்த நிறைவேற்றுக் குழுக் கூட்டத்திற்குத் தலமை வகிதிது உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.மேலும் இத்திட்டமானது எமது சங்கத்தின் வேண்டுகோளுக்கினங்க பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கபடும். இத்திட்டம் வெற்றியாளிக்கும் பட்சத்தில் ஏனைய தீவுகளுக்கும் விஸ்தரிக்கபடும்.சங்கத்தினால் 2006ஆம் ஆண்டிற்கான நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத் திட்டங்களை அனைத்தும் முன்னுரிமைண அடிப்படையில் நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளுக்குக்கேற்ப நடைமுறைப்படுத்தப்படுமெனவும் அவர் அங்கு கூறினார்.

வீரகேசரி – 04/06/2006

Posted on 04/06/04 & edited 09/09/14 @ Nainativu, LK