News

தற்போது பெய்திருக்கும் கடும் மழையால் வெள்ளங்களில் மூழ்கியிருக்கும் பாழடைந்த கிணறுகள் மற்றும் ஆலயங்களின் கேணிகள் என்பன இனங்காணப்பட்டு, உயிர் இழப்புக்களை தவிர்க்கும் நோக்கோடு நயினாதீவின் சகல பகுதிகளிலுமுள்ள கிணறுகளை நயினாதீவு கிராம அலுவலர்கள் J /34, J 35, J /36 வடக்கு, மத்தி, தெற்கு ஆகியோரும்...
Wed, 03/12/2014 - 14:43
புலம் வாழ் நயினை உறவுகளின் நிதிப்பங்களிப்பில் உருவாக்கப்பட்ட நயினாதீவு தம்பகைப்பதி பத்திரகாளி சமேத ஸ்ரீ வீரபத்திரப்பெருமானின் தேர் தரிப்பிடம் ஆலய உயர் திருவிழாவின் தேர் திருவிழாவின் போது திறந்து வைக்கப்பட்டது. திப்பணி வேலைகளை பூரணமாக நிறைவேற்ற கால அவகாசம் போதாமையால் தற்போது இத் திருப்பணி வேலைகள்...
Mon, 01/12/2014 - 12:01
இன்று (30/11/14) ஐயப்பனின் 14ம் நாள் மண்டலபூசை. நயினாதீவு ஐயப்பன் ஆலயத்திற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த ஐயப்ப சாமிமாரின் பஜனைகள் 18ம் படி திருவிளக்கு பூசைகள் என்பன இடம்பெற்று. அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது
Sun, 30/11/2014 - 12:34
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 83 வது பிறந்த தினம். நயினாதீவு ஸ்ரீ அமுதசுரபி அன்னதான சபையில் 23/11/2014 அன்று இடம்பெற்றபோது நிகழ்வை சாயி பாபாவின் நயினாதீவு கிளையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
Tue, 25/11/2014 - 21:27
நயினாதீவில் மழை நீரை கடலுக்குள் செல்லவிடாது தடுத்து நிறுத்தும் நயினாதீவு பிரதேச சபையினர். இதன் பயனாக நயினாதீவில் கோடை காலங்களில் ஏற்ப்படும் குடிதண்ணீர் பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்க முடியம் என மக்கள் பலர் தெரிவிக்கின்றனர்
Tue, 25/11/2014 - 21:05
யாழ்ப்பாணம் உற்பட தீவகம் முழுதும் நேற்றிரவு முதல் கொட்டியது கன மழை .. நயினாதீவில் மழை காரணமாக இன்று போக்குவரத்து தாமதம் வெள்ளத்தில் நயினாதீவின் சில பகுதிகள் மூழ்கின இன்றைய மழையால் நயினாதீவு சந்தையடி பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதி ஒன்றும் சேதமடைந்துள்ளது.
Tue, 18/11/2014 - 19:49
நயினாதீவின் மைந்தன் சமய சமூக சேவையாளன் திரு .சின்னத்துரை ஜெகநாதன் அவர்களுக்கு (கனடா மார்க்கம் ரொறன்ரோ கிரிக்கெட் லீக்) 2014 ஆண்டிற்கான சாதனையாளர் விருதினை வழங்கி கௌரவித்திருக்கின்றது. MTCL 20 வருடங்களாக அங்கம் வகித்து 1995 ம் ஆண்டில் துடுப்பாட்ட வீரனாக களம் இறங்கி பல சாதனைகளை...
Tue, 18/11/2014 - 11:20
நயினாதீவு ஸ்ரீ கணேச சனசமூக நிலையமும், கணேசா முன்பள்ளிப் பெற்றோர்களும் இணைந்து நடார்த்திய ஆசிரியர் தின விழாவும் சிறுவர்கள் தின விழாவும். இன்று (10/11/2014) நயினாதீவு கணேச சனசமூக நிலைய கலையரங்கில் இடம்பெற்றது
Tue, 11/11/2014 - 11:49
நயினாதீவு அபிவிருத்திக் கழகம் - பிரான்ஸ் இன் நயினை சுடர் - 5 நிகழ்வு கடந்த 01/11/2014 அன்று பிரான்ஸ் இல் நடைபெற்றது
Mon, 10/11/2014 - 11:49
இன்று (06/11/14) மாலை 3.00 மணியளவில் அம்பிகா சனசமூகநிலைய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வின் பிரதம விருந்தினராக ஓய்வுநிலை உதவி அரசாங்க அதிபரும், நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலய தலைவருமாகிய திருவாளர் கா. ஆ. தியாகராஜா அவர்களும். வேலணை பிரதேச சபை தவிசாளர் திருவாளர் .சின்னையா சிவராசா (...
Fri, 07/11/2014 - 07:58
நயினாதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தேசிய வாசிப்பு மாத போட்டிநிகழ்வு. நயினாதீவின் முன்பள்ளி மாணவர்களுக்கும் தரம் 1-5 வரையிலான பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டி நிகழ்வுகள் நேற்றைய (05/11/14) தினம் நயினாதீவு பிரதேச சபை நிகழ்ச்சி மண்டபத்தில் இடம்பெற்றது
Thu, 06/11/2014 - 08:02
5ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் 70-151 புள்ளிகளை பெற்ற நயினாதீவு கணேஷ கனிஷ்ட மகாவித்தியாலய மாணவ மாணவியர்க்கு இன்று இலங்கை பரீட்சைத் திணைக்களத்தல் வழங்கப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைச் சான்றிதழ்
Wed, 29/10/2014 - 10:59
மும் முனையில் முன்னேறியது சூரன்கள் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் இருந்தும், நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலயத்தில் இருந்தும், நயினாதீவு காட்டுக்கந்தன் ஆலயத்தில் இருந்தும். முறியடிச்சு தாக்குதலுக்கு நாளை தயாராகும் முருகப்பெருமான்.
Tue, 28/10/2014 - 10:52
இன்றைய கௌரி விரதம் . நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் .
Fri, 24/10/2014 - 22:49
நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஸ்ட மகாவித்தியாலயத்தில் இன்று (20/10/2014) இடம்பெற்ற ஆசிரியர் தின விழா
Wed, 22/10/2014 - 19:17
வடபகுதிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள் இன்று தீவகத்தின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தார். அதன் நிகழ்வாக நயினாதீவு நாகவிகாரையில் இடம்பெற்ற பூசை வழிபாட்டிலும், தொடர்ந்து விகாராதிபதி அதி வணக்கத்துக்குரிய நவந்தகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரரின் ஆலோசனைக்கமைய ''நாகதீப புனித பூமியில்''...
Thu, 16/10/2014 - 20:26
நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய அருகாமையுள்ள கேணிக்குழி வீதி இன்று வைபவ ரீதியாக வேலணை பிரதேச சபை தவிசாளர் திரு. சின்னையா சிவராசா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் ஆலய அறங்காவலர் சபையினரும் மற்றும் ,மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Thu, 16/10/2014 - 20:18
நிகழ்வில் நயினாதீவு நாகரஜமகாவிகாரையில் இருந்து எடுத்துச்செல்லப்படும் கலசம் நயினாதீவின் பிரதான வீதி வழியாக பெரகரா நிகழ்வுகளுடன் ஊர்வலமாக வலம்வந்து விகாராதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வு இதில் கலந்துகொண்ட ஊர் மக்கள் மாணவர்களுக்கு உணவுகள் குளிர்பானங்கள் என்பன வழங்கப்பட்டது.
Thu, 09/10/2014 - 19:58
நயினாதீவு பிரான்ஸ் அபிவிருத்திக் கழகம் நயினாதீவு அம்பிகா செல்லம் முன்பள்ளி களுக்கான பாண்ட் வாத்தியக்கருவிகள் மற்றும் அண்ணா முன்பள்ளிகளுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்ற போது. நயினாதீவின் பிரான்ஸ் கழக இணைப்பாளர் .நா .யோகநாதன் அவர்கள் உபகரணங்களை வழங்கிவைப்பதையும், மற்றும் யாழ்...
Mon, 29/09/2014 - 23:25
வேலனைப்பிரதேச சபையின் ஏற்பாட்டில் .நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய முன்னால் அமைக்கப்படுகின்ற கடல் அரிப்பு தடுப்புச்சுவர்
Tue, 23/09/2014 - 23:31

Pages