நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத் தேர்த்திருவிழா அனுஷ்டான உற்சவம்

அம்பிகை அடியார்களே!
ஈழத்தின் வடபால் பிரசித்திபெற்று விளங்கும் அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தில்
வருடாவருடம் நடைபெற்றுவரும் இரதோற்சவத்தினை முன்னிட்டு, கனடாவாழ் நயினை நாகபூசணி அம்பாளின்
பக்தர்களால் துர்க்கேஸ்வரத்தில் விஷேட அபிஷேகமும் உற்சவமும் நடாத்தப்படவுள்ளது.
நிகழும் விஜய வருடம் ஆனித்தி;ங்கள் 8ம் நாள் (யூன் 22ம் திகதி, 2013) சனிக்கிழமை மேற்படி
உற்சவம் நடைபெற இருப்பதால், அத்தருணம் அகிலம் அனைத்தும் அருள் உருவாய் அமர்ந்து ஆட்சி
செய்யும் அன்னை ஸ்ரீ நாக பூசணி அம்பாளின் பக்தர்கள் அனைவரும் அன்று காலை நிகழும் அபிஷேக
ஆராதனைகளிலும், மாலை நடைபெறும் திருவிழா ஆகியனவற்றிலும் பங்குபற்றி, அம்பாள், ஸ்ரீநாகபூசணி
அம்பாளின் திருக்கோலத்துடன் வீதியுலாவரும் அலங்காரக் காட்சியினையும் கண்டு, அம்பிகையின்
திருவருட்கடாட்சத்தை பெற்றேகுமாறு வேண்டிக்கொள்கிறோம். - www.durka.com

Posted on 12/06/13 & edited 12/06/13 @ ,