வீரகத்தி விநாயகர் ஆலய மகோற்சவம் ஆரம்பம்

நயினாதீவு செம்மனத்தம்புலம் அருள் மிகு வீரகத்தி விநாயகர் ஆலய மகோற்சவம்.

05/04/2015 (ஞாயிற்றுகிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பாமாகி 14ம் திகதி தேர் திருவிழாவும் 15ம் திகதி தீர்த்த திருவிழாவும் இடம்பெறும்.
என்பதனை அடியவர்களுக்கு அறியத்தருகின்றோம்.

கைலாசநாத வாமதேவக்குருக்களின் அருளாசியுடன் கைலாச விஜய்குருமணி அவர்களால் .மிகவும் சிறப்புடன் கொடியேற்றத் திருவிழா ஆரம்பமாகியுள்ளது.

அந்தண சிவாச்சாரியர்கள் வேதம் முழங்க அடியவரின் அரோகரா கோஷத்துடன் என்பெருமானின் கொடியேறியது.

எம்பெருமான் சுப்ரமணியர் சகிதம் உள்வீதி வலம் வந்து அடியவர் குறைத்து தீர்த்தருளினார்.

அடியவர் பசி தீர்க்க ஆலய அன்னதான மண்டபத்தில் அமரர் மகேஸ்வரன் ஞாபகார்த்த அன்னதானம் அவர்களின் உறவினர்களால் வழக்கப்பட்டது .

Event Date: 
Sunday 05 / Apr 2015
Posted on 05/04/15 & edited 06/04/15 @ Nainativu, LK