பிடாரி அம்பாள் ஆலய வேள்வி விழா: ஆரம்பம்

ஈழமணித் திருநாட்டின் வடபால் சைவமும் தமிழும் தழைத்து ஓங்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் சப்ததீவுகளில் நடுநாயகமாக விளங்கும் நயினாதீவின் கண் அறுபத்திநான்கு சக்த்திபீடங்களில் ஒன்றான புவனேஸ்வரி பீடம் கொண்டு வேண்டுவார் வேண்டுவதை வாரி வழங்கும் அன்னை நாகபூசணி அம்பிகையின் திருவருட் சக்தியோடு இணைந்த சக்தியாக அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீபிடாரி அம்பாளின் வருடாந்த வேள்வி விழா கும்பஷ்தானம்,

நிகழும் ஜய வருடம் வைகாசி மாதம் 23ம் நாள் (06/06/2014 - வெள்ளிக்கிழமை) அன்று பி.ப. 06:00 மணிக்கு கும்பஸ்தனதுடன் ஆரம்பமாகி, வைகாசி மாதம் 31ம் நாள் (14/06/2014 சனிகிழமை) அன்று வேள்வி திருக்குளிர்த்தி பொங்கலுடன் நிறைவு பெறுவதற்கு எம்பெருமாடியின் திருவருள் கைகூடியுள்ளதை அடியவர்களுக்கு அறியத்தருகிறோம்.

குறிப்பு
எம்பெருமாட்டியின் வேள்வி விழா சிறப்பாக நடைபெற 12/06/2014 அன்று நயினை வாழ் சைவ அடியார்கள் இல்லந்தோறும் அன்னையின் அடியவர்கள் காணிக்கைப் பொருட்களை ஏற்றுக்கொள்வதற்காக பவனிவருவார்கள். எனவே தங்கள் தங்களால் இயன்ற காணிக்கைப் பொருட்கள், பழவகை, அபிஷேகப் பொருட்கள், தேங்காய், இளநீர் போன்றவற்றை வழங்கலாம் என்பதை அறியத்தருகிறோம்.

06/06/02014 தொடக்கம் 14/06/2014 வரையும் ஸ்ரீ பிடாரி அம்பாள் அன்னதான சபையினர் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

நயினை ஸ்ரீ பிடாரி அம்மன் கூட்டுப்பிரார்த்தனை சபையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், கலை நிகழ்வும் இடம் பெரும்.

கிரியைகள்
ஆலய உற்ட்சவ பிரதம குருமணிகள்: "தருமை ஆதீன ஆகம பிரிவீனா" சிவஸ்ரீ கைலாசநாத வாமதேவக் குருக்கள் & சிவஸ்ரீ கைலாசராஜ் குருக்கள்.
ஆலய குருமணி: பிரம்மஸ்ரீ ச.தினேஷ்சர்மா.
பூமாலை அலங்காரம்: திரு. சி. ஆனந்தராசா, நயினை -2.
ஒலி, ஒளி அமைப்பு: திரு. நா. குனவண்ணன், ஐங்கரன் சவுண்ட் சேர்விஸ், நயினை -7.

இங்ஙனம் - ஆலய பரிபாலனசபையினர்.

1ம் நாள்
ஸ்நபனாபிஷேகம் வாஸ்து சாந்தி கடக்கஸ்தாபன கும்பஸ்தாபனம், ரஸ்ஸாபந்த்தனம் பந்தல் கால் நாட்டல்.

Event Date: 
Friday 06 / Jun 2014
Posted on 06/06/14 & edited 07/06/14 @ Nainativu, LK