கஜமுகா சூரன் போர் - நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலயம

கஜமுகா சூரன் போர் - நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலயம

பிள்ளையார் நோன்பின் பெரும் பயன்
வெள்ளை எருதேறும் விரிசடையோன் பெற்றெடுத்த
பிள்ளையார் நோன்பின் பெருங்கதையை - உள்ளபடி
நோற்றார் மிகவாழ்வார் நோலாது அருகு இருந்து
கேட்டோர்க்கும் வராது கேடு

சூலிலார் நோற்கிற் சுதரை மிகப் பெறுவர்
சாலமிகும் வெங்கலியார் தாம்நோற்கில் மேலைப்
பிறப்புஎல்லாம் நல்ல பெருஞ்செல்வம் எய்திச்
சிறப்பிலே வாழ்வார் சிறந்து

பொன்னுமிகும் கல்விமிகும் புதிரரோடு எப்பொருளும்
மன்னும் நவமணியும் வந்து அணுகும் - உன்னி
ஒருக் கொம்பின் யானைமுக உத்தமனார் நோன்பின்
திருக்கதையை கேட்கச் சிறந்தது

பொற்பணைக்கை முக்கண் புகர் முகத்துப் பொன்மவுலிக்
கற்பகத்தின் நோன்பின் கதைதன்னைச் - சொற்பெருகக்
கற்றவரும் நோற்றவருங் காதலித்துக் கேட்டவரும்
பெற்றிடுவர் கற்பகத்தின் பேரு

Event Date: 
Saturday 27 / Dec 2014
Posted on 30/12/14 & edited 30/12/14 @ Nainativu, LK