கனடாவில் பெருமையுடன் நடாத்தப்பட்ட "ஸங்கீதஸ்வரங்கள் 2014" மாபெரும் இசை விழா

நயினை மண்ணின் புதல்வி கலாபூஷணம் சுப்பிரமணியம் கனகரத்தினம், தில்லைநாயகி அவர்களின் அன்புப்புதல்வி சாருமதி மனோகாந்தன் அவர்களால் கனடாவில் பெருமையுடன் நடாத்தப்பட்ட "ஸங்கீதஸ்வரங்கள் 2014" எனும் மாபெரும் இசை விழா.

கனடாவில் வெற்றிகரமாக இயங்கி வரும் “சாமகானம்” நுண்கலைக் கல்லூரியின் ஆண்டு விழா கடந்த (09/11/2014) ஞாயிறு மாலை “ PLAY HOUSE THEATER “ மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் ஸ்தாபகரும் அதிபருமான திருமதி சாருமதி மனோகாந்தன் அவர்களின் .சிறந்த வழி நடத்தலில் வீணை பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் மேடையில் தங்கள் கர்நாடக திறனை வெளிக்காட்டினார்கள்.

விழாவின் பிரதம விருந்தினராக பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக “கனடா உதயன் லோகேந்திரலிங்கம் அவ்ர்களும், கனடா யோர்க் பிராந்திய கல்விச் சபையின் பிரதிநிதி யுனைதா நாதன் அவர்களும் கலந்து கொண்டு கல்லூரியின் ஸ்தாபகரும் அதிபருமான திருமதி சாருமதி மனோகாந்தன் அவர்களையும் அவரிடம் இசை மற்றும் வீணை பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவிகளையும் பாராட்டி பேசினார்கள். கனடா "ஸாமகானம் நுன்கலைப்பீடம்" கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இசைத்துறையில் நடத்தி வரும் நிகழ்வுகளின் மகுடமாக கடந்த நவம்பர் மாதம் நடாத்திய "ஸங்கீதஸ்வரங்கள் 2014" எனும் மாபெரும் இசை நிகழ்வின் தொகுப்பு..

எங்கள் நயினை மண்ணின் புதல்வியை நாங்களும் அம்பாளின் அருளுடன் பாராட்டுகின்றோம் தொடரட்டும் உங்கள் இசைப்பயணம்.
வாழ்க வளமுடன்.

Event Date: 
Sunday 09 / Nov 2014
Posted on 10/01/15 & edited 10/01/15 @ Canada, CA