அமரர் புவனேஸ்வரி இராஜரெத்தினம்

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி இராஜரெத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பிற்கு இலக்கணமாய்
பண்பிற்கு சிகரமாய்
பாசத்திற்கு ஒளிவிளக்காயிருந்து எமை
பாரினிலே எமை வளர்த்து
பரிதவிக்கவிட்டுச் சென்ற எம் தெய்வமே

கண்ணை இமை காப்பது போல் எமை
காவல் காத்த எம் காவல் தெய்வமே
கலையாத உங்கள் முகமும்
கள்ளமில்லாத உங்கள் சிரிப்பும்
காண்பது எப்போது எம் இதய தெய்வமே

உங்கள் உருவம் மறைந்தாலும்
நின் உயிர் எப்போதும் எம்மோடுதான்
இருக்கின்றது அன்புத் தெய்வமே

ஆண்டொன்டென்ன ஆயிரம் ஆண்டானாலும்
நித்தம் உங்கள் நினைவுகளோடு
நின் பாதமலர் பணிகின்றோம் பாசத்துடன்

உங்கள் பிரிவால் துயருறும் - குடும்பத்தினர்

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — பிரான்ஸ்
தொலைபேசி: +33950367950
செல்லிடப்பேசி: +33652566581

Event Date: 
Thursday 22 / Jan 2015
Posted on 22/01/15 & edited 22/01/15 @ France, FR