அமரர். திரு. கு. ந. இராசநாயகம்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்- நயினாதீவைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கு. ந. இராசநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆண்டொன்று போனதென்ன
மாண்டு போன உலகினிலே
எங்கள் இதயம் கவர்ந்த தெய்வமே
ஏன் இந்த உலகம் கடந்து சென்றீர்கள்?
அப்பாவாய், அண்ணாவாய் எங்களிடம்
ஒரு தடவை ஓடோடி வருவீர்களா?
எங்களை அனாதையாக்கிவிட்டு
எங்கு போனீர்கள்?

புன்னகை பூத்த முகமும் குடும்பத்தை
நேசிக்கும் குணமும் நட்புப் பாராட்டும்
தன்மையும் கொண்ட தங்கள் முகம்
பார்க்காது உள்ளம் வாடுகிறதே!
விழிகள் எப்பொழுதும் தேடுகின்றனவே
என்று காண்போம் என்று மனம் ஏங்குகிறது
இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல செய்து
எல்லோர்க்கும் நல்லவராய் நாணயமாய் நடந்தீர்

பண்புடைமை காத்து பக்குவமாய் வழிநடந்தீர் ஓராண்டு சென்றாலும் ஈரவிழி காயவில்லை ஏனோ இறைவன் இடைநடுவில் பறித்துவிட்டான் அதனால் ஏங்குகின்றோம் தினமும்.

பாசத்தை காட்டி அண்ணன், தம்பி, தங்கையென
நேசமாய் நாம் வாழ்ந்த காலம் நித்தம்
நினைவிற்கு வருகுதய்யா மண்ணில்
வாழ்வெல்லாம் பொய்யாகிப் போனது போல்
உணர்த்திறது உன் முகத்தைப் பார்க்க எம் விழிகள் ஏங்குகையில்....
உங்கள் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கும்
உங்கள் சகோதரி, ,சகோதரன், மைத்துனர் மைத்துனி, மனைவி, பிள்ளைகள் மற்றும் நண்பர்கள். ஒம் சாந்தி!! சாந்தி!! சாந்தி!!
Event Date: 
Sunday 07 / Jun 2015
Posted on 09/06/15 & edited 09/06/15 @ London, GB