அமரர். செல்வன். சிவம் அட்சயன்

நயினை மண்ணின் நாயகனாய் நம்மவர்கெல்லாம் செல்லக் குழந்தையாய்
நமக்கு நல்லதோர் அறிவுச் செல்வனாய் நண்பர்கள் சுற்றும் சூழ வலம் வந்தாய்
- அட்சயன் குட்டியே

முத்து முத்தாய் நீ சிரிக்கும் உன் முக வடிவும்
கொத்துக் கொத்தாய் நீ கொட்டிய உன் மழலைச் சொற்கள் எல்லாமே
நித்தம் கண்கலங்கி நாளும் வாடுகிறோம்
அத்தனையும் பறித்து காலனவன் எங்களிடம் காவிச் சென்றுவிட்டனே
இன்றுடன் ஓராண்டு ஓடி மறைந்ததுவே

ஒரு நொடிப் பொழுதும் என் செல்வனை நினைக்காமல் இருக்க முடியுமாட ?
உன் புன்னகையில் நாங்கள் கழித்த காலம் கனவாகிப் போனதையா
உள்ளம் பூரிக்க எம்முடன் பிறப்பாய் மீண்டும் எம்வம்சத்தில் வந்து
அம்பாள் அருளால் பிறப்பாய் என்றே தினமும் வழிகிறோம்.

ஓம் சாந்தி ..ஓம் சாந்தி ..ஓம் சாந்தி ..

உமது பிரிவால் துயருறும் பெற்றோர், சகோதரர்கள், உற்றார், உறவினர்கள்

திரு திருமதி சிவம் நந்தா தம்பதிகளின் .அருந்தவப்புதல்வன் அமரர் அட்சயன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுதினம்.
இக் குழந்தையின் ஆத்ம சாந்தி வேண்டி எல்லாம் வல்ல நயினை தாயவள் நாகபூஷணி அம்பிகையை வேண்டுகின்றோம்.

Event Date: 
Wednesday 29 / Apr 2015
Posted on 29/04/15 & edited 29/04/15 @ Nainativu, LK