வசந்தி சிவசுப்பிரமணியம்

50 வது பிறந்தநாள் வாழ்த்து

பொன் பூத்த நயினையிலே பூத்த மலர் ஒன்று
பொன் விழாக் காணுது பூரித்து நின்று இன்று
வாழுகின்ற காலமெல்லாம் வசந்தங்கள் ஆக வென்று
வசந்தியவளை வாழ்த்துகின்றோம் நாமும் இன்று

கன்னத்தின் குழி அழகும் கயல் போன்ற உன் விழி அழகும்
கயவரையும் நேசிக்கும் கள்ளமில்லா உன் உளமும்
உறவொன்று வந்துவிட்டால் உபசரிக்கும் உன் பண்பும்
உலகமது உள்ளவரை உன்னோடு வாழ்ந்திடட்டும்

இல்லறம் என்னும் நல்லறம் காத்து
பல்லறம் காத்த எம் முன்னவர் கோர்த்த
பதினாறு பேறுகள் பாரினில் சேர்ந்து
தேனாறு போல் பாயும் தீந்தமிழ் போல் நீடு வாழி

சுந்தரம் பெற்ற சுந்தரியே நீடு வாழி
நிரந்தரமாய் எம்முள் நிறைந்தவளே நீடுவாழி
வரந்தரும் நாகம்மா அருள்தன்னைச் சுரந்திடவே
புரந்தரியாம் நாக-பூசினியைப் பூசித்து நிற்கின்றோம்
Event Date: 
Sunday 08 / Sep 2013
Posted on 08/09/13 & edited 29/06/14 @ Canada, CA