மகாலிங்கம் - சியாமளாதேவி

நயினையின் நற் சேவையாளனுக்கு இன்று 45 வது திருமண நாளும் 65வது பிறந்தநாளும் .

நயினாதீவு மலையிற் புலம் ஸ்ரீ மலையில் நாயனார் சபரி ஐயப்பன் ஆலய தலைவரும் நயினாதீவு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் அன்னதான சபை பொருளாளரும். சுவிஸ் ஒன்றிய நயினாதீவின் இணைப்பாளரும், முன்னாள் நயினாதீவு வைத்தியசாலை உத்தியோகஸ்தருமான சமய சமூக தொண்டருமான திரு. முத்தையா ஞானேஸ்வரி தம்பதிகளின் புதல்வர் திருவாளர் மகாலிங்கம் - சியாமளாதேவி தம்பதிகளின்

45 வது திருமண நன் நாளும் 65 வது பிறந்த நாள் நிகழ்வும் அவர்களின் பாசமிகு சகோதரர்களால் இன்று (04/06/2015) வெகு விமர்சையாக அன்னாரின் இல்லத்தில் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் திரண்டிருக்க ஐயப்பனின் அருளோடும் அம்பாளின் திருவருளோடும் மிகவும் சிறப்புடன் இடம்பெற்றது
.
இவ் இரு உள்ளங்களையும் சீரும் சிறப்புடன் என்றும் நலமாய் வளமாய் நீடூழி காலம் வாழ வாழ்த்துகின்றோம் .வாழ்க வளமுடன் .

Event Date: 
Saturday 04 / Jul 2015
Posted on 05/07/15 & edited 05/07/15 @ Nainativu, LK