நயினைக் கவிஞர் நாக. சண்முகநாதபிள்ளை

அருள்மழை பொழியும் அம்பிகையின் அருட்திறனை
கவிமழையில் பொழிந்த கவிஞன் இவன்
பனிமழை பொழி கனடா நாட்டில் பக்கத்தில் தேவியோடு
வான்மழை போல் வாழ வாழ்த்துக்கள் தூவிடுவோம்

அண்ணல் காந்தி மீண்டும் அவதரித்து வந்தாற் போலுருவும்
அருந்தமிழ் கடவுளாம் அழகன் முருகன் அவனது பெயரும்
தணியாத உன் தமிழ் மோகம் தனையும்
தாய்நாட்டுப் பற்றையும் தரணிக்குப் பறை சாற்றும்

சொல்லைத் திரித்து சுவைபடக் கவி தந்த
மில்லர் மகன் இவர் ஞாலம் சொல்லும் பெயரிவர்
நயினை மகாவித்தியாலயம் நன்றாய் மிளிர்ந்திடவும்
மத்திய கல்லூரியது மாண்புடன் நிமிர்ந்திடவும் வைத்த அதிபர் இவர்

மணித்தீவின் வித்தகனே ! மாசில்லா மனத்தவனே!
அன்னைத் தமிழை அலங்கரித்து நின்றவனே!
அதிபர்களே அதிசயிக்கும் ஆளுமை கொண்டவனே!
கன்னித் தமிழ்மொழி போல் காலமெல்லாம் நீ வாழி!

நயினை நங்கை

Event Date: 
Monday 03 / Feb 2014
Posted on 03/02/14 & edited 30/06/14 @ Canada, CA