திரு. மகேஸ்வரநாதன் விசுவலிங்கம்

எழுபதாவது பிறந்த நாள் வாழ்த்து

மரம் நாட்டி நயினை மண்ணைச் செழிக்க வைத்த விசுவலிங்கம்
தரம் குறையாத் தங்கமென மிளிர்ந்த நல்லாள் நாகம்மா
வரம் பெற்றுப் பெற்ற மகன் நான்காம் வாரிசென வந்த மகன்.
கரம் பற்றிய இல்லாளோடு காண்கிறான் எழுபது இன்று

மெள்ள இவர் எழுபதை அடைந்தார் என்று
எள்ளளவும் நம்ப எவராலும் முடியாது
அள்ளஅள்ளக் குறையாத அன்பு கொண்டு வாழும் இவர்
உள்ளம் போல் பல்லாண்டு இவ் உலகினிலே வாழ்ந்திடட்டும்

புலம் பெயர்ந்து வாழும் உம் புத்திரர்கள் அன்போடு
வளம் நிறைந்த வாழ்வு தொடர்ந்தே உம்மோடு வர
இளமைத் துடிப்போடு என்றும் இன்பக் களிப்போடு
பழமை மிக்க தமிழ்மொழி போல் பாரினிலே நீடு வாழ்வீர்

சுந்தரத் தோற்றமும் சுறுசுறுப்பான நடையும்
அந்தரப் படுவோர் வாழ்வில் ஆண்டவன் போல் உதவும் பண்பும்
நிரந்தரமாய் என்றும் உம்மோடு இருந்திடவே
நீடூழி வாழ புரந்தரியாம் நாகபூசினியை வரந்தரவே வேண்டுகின்றேன்

நயினை நங்கை

Event Date: 
Thursday 24 / Oct 2013
Posted on 24/10/13 & edited 24/10/13 @ ,