திரு நாகலிங்கம் ஏகாம்பரநாதன்

எழுபத்தைந்தாவது பிறந்தநாள் வாழ்த்து

அன்னப்பிள்ளை பெற்ற ஒற்றை மகன்
அவனீயிலே நல் நூல்கள் யாவும் கற்ற மகன்
அழகான ஈரிரண்டு மகவைப் பெற்ற மகன்
அகவை எழுபத்தைந்து கண்டான் இன்று

முக்காலமும் அறிந்த முழுமுதற்கடவுள் போல்
எக்காலமும் உணர்ந்த ஏகாம்பரநாதன்
உந்தன் வாழ்வு வையந்தனிலே -என்றும்
பொற்காலமாய்த் திகழ வாழ்த்திடுவோம்

பார் போற்றும் நல்லவனை பவளவிழா நாயகனை
தேரோடும் நயினைத்தாய் திருவடியைத் தினம் தொழுபவனை
கார்குழலாள் செல்வமலர் கரம்பிடித்த துணைவனை
ஊர் எல்லாம் சேர்ந்து உவகை கொண்டு வாழ்த்தட்டுமே

நயினை நங்கை

Event Date: 
Tuesday 17 / Feb 2015
Posted on 17/02/15 & edited 17/02/15 @ Jaffna, LK