திரு சிவநேசன் குமாரசாமி

அறுபதாவது பிறந்தநாள் வாழ்த்து

அறிவுக்கண் திறந்த நல்லாசான்கள் இருவரை
அன்னை தந்தை எனக்கொண்டோன்- அவனியை
அன்பெனும் ஆயுதத்தால் ஆளும் திறனுடையோன்
அறுபது அடைந்தான் என்றே அகவின மயில்கள்
கூவின குயில்கள் ஆர்ப்பரித்தது கடல்
குவலயந்தனில் இவன் குதூகலமாய் நீடு வாழி


தமிழின் ஆழம் கண்ட தந்தை குமாரரைப் போல்
தாய்மொழி மோகம் கொண்டோன்-தரணியில்
இணையில்லா மழலைச்செல்வம் இரண்டினைப் பேறாய்ப் பெற்றோன்
நல்துணையான திலகத்தோடு புவிதனில் நீடு வாழி


மணிவிழா நாயகனை மகிழ்வுடனே மனதார வாழ்த்திடுவோம்
தேசமெல்லாம் நேசம் கொள்ளும் நேசனை பாசமலர் தூவி வாழ்த்திடுவோம்
அறுபது அகவை அடைந்தவனை ஆண்டாண்டு வாழ வாழ்த்திடுவோம்
நெறிதவறாது நேரிய வாழ்வு வாழ்பவனை நீடூழி வாழ வாழ்த்திடுவோம்

நயினை நங்கை

Event Date: 
Thursday 02 / Apr 2015
Posted on 02/04/15 & edited 02/04/15 @ US, US