திரு. குமாரசாமி ஸ்ரீதரன்

அவர்களுக்கு எங்களது
அறுபதாவது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மணித் தீவின் மகன் இவனை மனம் மகிழ்ந்து வாழ்த்துகின்றோம்.

நயினை மண் பிறந்து, நற் புகழில் நனி சிறந்து
அகவை அறுபதைக் காண்கின்ற ஆண்டிதனில்
உவகை நாம் கொண்டு வாழ்த்துகின்றோம் வாழியவே!
இன்னும் நூறாண்டு இன்பமுடன் வாழியவே!

மணி விழாக் கண்டு மனம் மகிழும் அறுபதினில்
அணியணியாக அனைவருமே திரண்டிருக்க
மணித்தீவாம் பல்லவத்தின் நினைவுகளை மெருகூட்டி
அணி செய்யும் தமிழால் அன்போடு வாழ்த்துகின்றோம்.

பண்பு மிகு கௌசல்யா அன்போடு அகத்திருக்க,
சுவியும், சஞ்சீயும் பாசமுடன் அருகிருக்க,
என்றென்றும் இல்லத்தில் புன்னகையே குடியிருக்க
நன்றே வாழ வாழ்த்துகினறோம்; வாழியவே.!

ஊரோடும், உறவோடும், உடன் பிறந்தோர் பற்றோடும்
பேரோடும், புகழோடும், பெரியோர்கள் வாழ்த்தோடும்.
சீரோடும், சிறப்போடும், நண்பர் தம் நட்போடும்.
பூரணியாம் நாகம்மாள் வரம் பெற்று வாழியவே!வாழ்க! வாழ்க! வாழ்க!

Event Date: 
Sunday 29 / Jun 2014
Posted on 28/06/14 & edited 28/06/14 @ Switzerland, CH