திரு குகதாசன் செல்லப்பா

பிறந்தநாள் வாழ்த்து

செல்லப்பா பார்வதி செய்தவத்தால் பிறந்தமகன்
செல்வந்தன் என வாழ்ந்து செயற்கரிய செய்தமகன்
கடின உழைப்பின் உயர்வை க்கற்றுக் கொடுத்தமகன்
மண் மீது தோன்றிய மகத்தான நாளின்று

வேலவன்அடிமைஎனப்பெயரைப்பெற்றாய்
வேலையில்லாஇளைஞர்களுக்குவேலைகொடுத்தாய்
காலைமாலைதெரியாமல்இருந்ததுபோதும்-எம்
கண்ணீரைத்துடைத்திடஎழும்பிவாருமையா

எத்தனைவீட்டுஇருள்உன்னால்அகன்றதையா
எத்தனைவீட்டில்அடுப்புக்கள்உன்னால்எரிந்ததையா
எம்வீட்டின்ஒளிவிளக்கே-மின்னொளிவெளிச்சம்போதாது
உன்ஒளிவெளிச்சம்வேண்டும்அதுவும்உடனேவேண்டும்

விற்பனையால்உயர்ந்துவிண்ணளவுதொட்டமகன்
கற்பனைக்கதைகளைப்போல்கல்லாய்இருப்பதும்ஏன்?
தற்பெருமைஇல்லாதஉன்தங்கங்கள்நான்கும்
வற்றாதஉன்னன்புக்குவாடுவதுபுரியலையா?

ஓய்வாகநீரிருந்துநாம்ஒருநாளும்பார்த்ததில்லை
இளைப்பாறிஇருக்கஇதுதருணம்இல்லையையா
மழைக்காலம்வருமென்றுவாடும்கொக்கினைப்போல்
உம்மோடுஉறவாடும்ஒருகணத்துக்குஏங்குகின்றோம்

அம்பிகையின்அருள்மழைஉன்மீதுபொழியட்டும்
அன்புள்ளங்கள்வாழ்த்தொலிகள்உன்னைவந்துசேரட்டும்
மனைவிமக்கள்மகிழும்நாள்விரைவில்வந்திடட்டும்
மண்மீதுஉன்வாழ்வுநீண்டுநிலைத்திடட்டும்

நயினை நங்கை

Event Date: 
Saturday 07 / Feb 2015
Posted on 07/02/15 & edited 08/02/15 @ Colombo, LK