திருமதி தவமணிதேவி சபாநாதன்

கண்மணி கருவில் உருவாகி மலர்ந்தவளே
நல்மணியாய் நயினை மண்ணில் நாளும் வாழ்பவளே
தவமணிதேவி என்று தரணியில் நாமம் கொண்ட
பெண்மணியே! அகவை எழுபத்தைந்தை அடைந்த பொன்மணியே !

ஆதியில் ஆசிரியர் ஆகி அழகுறப் பணி புரிந்தாய்
பாதியில் அதிபராய் பதவியில் உயர்வு பெற்றாய்
மீதிக் காலமெல்லாம் நாகம்மை பாதக் கமலத்தில்
நாதி அவள் என்றே நற் பணிகள் செய்கின்றாய்

நாடி வரும் அடியவர்க்கு நல்லருள் புரிகின்ற அம்பிகைக்கு
ஆடிப்பூரத் திருவிழா அதிசிறப்பாய் நடந்திடவே
ஓடிஓடிப் பணி புரியும்ஒப்பற்ற நாயகன் தன்னோடு
கூடி இன்னும் பல்லாண்டு இக்குவலயத்தில் வாழ்ந்திடுவாய்

வாழிய சரவணமுத்துப் பெற்ற எங்கள் சொத்து வாழியவே
வாழிய அறிவொளி பரப்பிய ஆசான் வாழியவே
வாழிய நல்லான் சபாநாதன் தன் நாயகி வாழியவே
வாழிய வானும் மண்ணும் வாழ்த்திட வாழியவே

நயினை நங்கை

வாழ்த்த விரும்பின் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் : 011947730032

Event Date: 
Monday 18 / Nov 2013
Posted on 19/11/13 & edited 19/11/13 @ ,