சண்முகானந்தன் நாகநாதன்

எழுபதாவது பிறந்தநாள் வாழ்த்து

இரும்பு மனிதன் பெயர் கொண்ட கரும்பு மனிதன் நாகநாதன்
தங்க மனமுடையாள் தன்னையும் ஈயும் குணத்தாள் செல்லம்மா
அங்கம் சுமந்து பெற்ற தங்கமகன்- அருங்குணத்தாள்
அறிவுடையாள் அழகுடையாள் அன்புடையாள்

அத்தனையும் உடையவளாம் அல்லை மகள் வனஜாவின் துணைவன்
ஆர்த்தி திவ்யா என கீர்த்திமிகு மகவுகளைப் பெற்றோன்
எழுபது அகவையை எட்டினான் என்று கொட்டிடு முரசே கொட்டு
மட்டிலா மகிழ்வோடு அவன் மண்ணில் நீடுவாழக் கொட்டு

அறிவோடு ஆளும் சேர்ந்து வளர்ந்த அழகுத் தோற்றம்
நெறியோடு வாழும் குறள் வழி போல வாழ்வு
நாகநாதன் தன்மகன் சண்முகன் உந்தன் சொத்து –நீ
நயினை மண்ணில் விளைந்த நல் முத்து

சிங்களவரே சிலிர்த்திடும் உன் சிங்களப் பேச்சும்
ஆங்கிலேயரே அதிசயிக்கும் ஆங்கிலமும்
அன்னைத் தமிழ்மீது ஆழமான அறிவும்
முன்னம் நீ செய்த தவப்பயனால் பெற்றதுவோ

வல்லவனை வாழ்த்தி வானமே மழையைப் பொழி
நல்லவனை வாழ்த்தி நட்சத்திரங்களே ஒளிருங்கள்
பாராண்ட மன்னர் புகழோடு – என்றும் மகிழ்வோடு
நூறாண்டு நூறாண்டு நீ வாழி

நயினை நங்கை

Event Date: 
Monday 16 / Feb 2015
Posted on 17/02/15 & edited 17/02/15 @ Colombo, LK