கோபாலசுந்தரம் சின்னத்தம்பி

பிறந்தநாள் வாழ்த்து (16/01/2014)

அப்பன் சிவனைப் போல் அதிக நாமம் கொண்டோன்
தப்பில்லாத வாழ்வைத் தரணியில் வாழும் வல்லோன்
எப்போதும் நலம் வாழ உம் பிறந்த நாளினிலே
கைப்போது மலர் தூவிக் கடவுளரை வேண்டுகிறோம்

சொக்கும் உம் எழில் கண்டு சொக்கன் எனச் சொன்னார்கள்-மக்கள்
மனங்களிலே மணி என அடித்ததால் மணி என்றே அழைத்தார்கள்
பல்லோடு சொல்லையும் பளிச்செனக் காப்பதாலே கோபால் என்றார்கள்
அந்தரங்கள் தீர்த்து உதவுதலால் கோபாலசுந்தரம் எனக் கொண்டார்கள்

கணினி இவரோடு மணிக் கணக்கில் விளையாடும்
சதுரங்கம் இவரோடு ஆடிச் சரி என்று விலகி விடும்
இணையத்தளம் என்றும் இவரோடு இணைந்திருக்கும்
இனிமைத் தமிழ் போல இவர் பேச்சும் இனித்திருக்கும்

வித்தைகளில் சிறந்தவனை விளையாட்டில் உயர்ந்தவனை
முத்தெனவே நயினை பெற்ற சொத்தென வந்தவனை
சகலமும் அறிந்தவனை சரஸ்வதி துணைவனை
நீடூழி காலம் வாழ நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

நயினை நங்கை

Event Date: 
Thursday 16 / Jan 2014
Posted on 16/01/14 & edited 30/06/14 @ Canada, CA