கலாநிதி சபா வரதராஜா

தொடர்ந்து தமிழர் வாழ்வில் படர்ந்த இன்னல்களை
துடைக்கப் பிறந்தமகன் புதுமை படைக்கப் பிறந்த மகன்
ஆச்சரியம்ஒன்று தந்தான்அறுபத்தைந்துஅகவை இன்றுஎன்று
பூச்சொரிந்து வாழ்த்திடுவோம் பூவுலகில் நீடு வாழி

கன்னியர்கள் காளையர்கள் கல்யாண பந்தங்கள்- உம்
கரம் பட்டுப் பதிவானால் காலமெல்லாம் நீடிக்கும்
கற்றுக்கரை தேர்ந்து “கலாநிதி” கள் ஆவதுண்டு
மற்றவர்க்குச் சேவை செய்யும் மகத்தான பணியாலே
அகிலமெல்லாம் அதிசயிக்க ஆனாய் நீ“கலாநிதி” யாய்
மாணவனாய் ஆனபோதே சாரணனாகி
மக்களுக்கும் நாகம்மாளுக்கும் பணி செய்தவன் நீ
பறந்து பறந்து நீ செய்யும் பணியின் உயர்வு கண்டு
“சிறந்த மனிதன்” எனும் சீரிய விருது பெற்றாய்

செம்மணத்தம்புலம் வீரகத்திவிநாயகர் குடமுழுக்குச் சிறப்புறவே
செந்தமிழ்க் கடவுளாம் முருகன் தன் அடியவனை நீ அழைத்ததாலே
வாரியார் சொற்பொழிவு கேட்கும் வாய்ப்பைப் பெற்றது நயினை மண்
வரலாற்றில் இடம்பெற்றது உனது பெயர்

கனடிய நயினைமக்கள் கலந்திடவே ஒரு சங்கம்
இருந்திடவேண்டுமென்றே குரல் கொடுத்து
தீபம் எனும் கலைநிகழ்வும் சுடர் விட வழி வகுத்தவனே
தீர்க்காயுளுடன் இந்திராதேவி தன்னொடும் நீடு வாழி

தொண்டினுக்கெனவே சீதா வயிற்றில் தோன்றிய மகனே நீடு வாழி
மாதவம் செய்து நயினை மண் பெற்ற மாதவனே நீடு வாழி
துன்பப்பட்ட தமிழ்மக்கள் துயர் துடைத்தவனே நீடு வாழி
அன்பாலும் பண்பாலும் அதிசிறந்து நிற்பவனே ஆண்டாண்டு நீ வாழி

-நயினை நங்கை

Event Date: 
Wednesday 30 / Apr 2014
Posted on 30/04/14 & edited 30/06/14 @ Canada, CA