ஐம்பதாவது பிறந்தநாள் வாழ்த்து வைத்தியகலாநிதி சுமதி இளங்கோ

வித்தையிலே சிறந்தவளே! வித்துவான் மகனை மணந்தவளே!

முத்தான நட்புக்களைச் சொத்தெனக் கொண்டவளே!

மணியான பெற்றோர்க்கு மூத்தமகளெனவே வாய்த்தவளே

பத்தைந்தை அடைந்தவளே! பார் போற்ற நீடு வாழி

அச்சடித்த காகிதம்போல் அழகான கையெழுத்தோடும்

அழகழகாய்ப் பொருட்களை அடுக்கி வைக்கும் திறத்தோடும்

களிப்புடனே கல்வியினைக் கற்கின்ற உன் திறனோடும்

எல்லையில்லா மகிழ்வுடனே இப்புவியில் நீடு வாழி

நீ சேலை கட்டும் விதத்தினிலே சொக்கி நின்றோர் பலருண்டு

நீ கீறுகின்ற ஓவியத்தில் திகைத்து நின்றோர் பலருண்டு

நீ செய்யும் வைத்திய சேவையிலே உயிர்பிழைத்தோர் நிறைய உண்டு

நீடூழி நீடூழி நின் சேவை தொடர்ந்திடட்டும்

இரா இரா என மூன்று ரம்மியக் குழந்தைகளைப்

பேறாகப் பெற்ற பெருமைமிகு தாயே!

மாறாத கீர்த்தியை மாநிலத்தில் கொண்டவளே!

நூறாண்டு நூறாண்டு வாழி வாழி

நயினை நங்கை

Event Date: 
Thursday 31 / Jul 2014
Posted on 31/07/14 & edited 04/08/14 @ Canada, CA