திரு திருமதி சிதம்பரநாதன்

நாற்பதாண்டு திருமணநாள் வாழ்த்துப்பா

கரங்கள் நீங்கள் பற்ற வரங்கள் நாங்கள் பெற்றோம்
தாரமாய் நீங்கள் ஆனதால் தரமாய் நாங்கள் ஆனோம்
பெற்றவராய் நீங்கள் ஆனதால் கற்றவராய் நாங்கள் ஆனோம்
மற்றவர் எம்மை மதிக்கும் நிலை பெற்றோம்

தேசம் கடந்து நாங்கள் வாழ்ந்தாலும் – உம்
நேசம் எங்களை நெருக்கமாய் வைக்கிறது
வேசம் போடும் வெளிநாட்டு வாழ்க்கையிலும்-உம்
பாசம் எங்களுக்குப் பல படிப்பினைகள் தருகிறது

தடம் மாறா வாழ்வை நாங்கள் தரணியில் வாழவென்றே
புடம் போட்டு வார்த்தெடுத்து – வாழ்க்கைப்
பாடத்தை வரி வரியாய்ச் சொல்லித் தந்த
நடமாடும் தெய்வங்களே! நாளெல்லாம் நீவிர் வாழ்வீர்

நாளும் உம்மை வாழ்த்தும்,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

Event Date: 
Monday 16 / Sep 2013
Posted on 16/09/13 & edited 29/06/14 @ Colombo, LK