சர்வ சமய சந்நிதிகள்

அறிமுகம்
இலங்கையில் 'சர்வ சமய சந்நிதிகள்' அமைந்து விளங்கும் தனிப்பெருஞ் சிறப்பு மிக்க புனித பூமியாக நயினாதீவு விளங்குகின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்கே சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இத்தீவானது 4.66 ச.கி. மீற்றர் பரப்பளவைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. இச்சிறுதீவில் மொத்தமாகவுள்ள எட்டு வட்டாரப் பிரிவுகளிலும் சமய வழிபாட்டுச் சந்நிதிகள் காணப்படுவதை நோக்கும்போது, இத்தீவைக் 'கோயிற்தீவு' என்றும் குறிப்பிடலாம். நயினாதீவில் காணப்பட்ட சமய சந்நிதிகளைக் கருத்திற்கொண்டே அத்தீவு காலத்துக்குக் காலம் நாகதீவு (நாகத்தீவு), நாகநயினார்தீவு, நாகேஸ்வரம் ஆகிய பெயர்களினால் அழைக்கப்பட்டு வந்ததாகத் தெரிகின்றது. இத்தீவில் இந்துசமயக் கடவுளர்களுக்கான சந்நிதிகள் மட்டுமன்றி பௌத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களும் இருப்பது இத்தீவுக்குரிய தனிச் சிறப்பாகும், இங்கு காணப்படும் சமய சந்நிதிகளின் வரலாறு மற்றும் வழிபாட்டுச் சிறப்புகள் என்பனவற்றை எடுத்துக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.

நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலயம்

இலங்கையில் தாய்த்தெய்வ வழிபாட்டின் மிகு தொன்மைக்குச் சான்றாக நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம் விளங்குகின்றது. இவ்வாலயம் நயினாதீவு முதலாம் வட்டாரத்தில் ' பரப்பரவன் சல்லி' என்னும் காணிப்பகுதியில் கிழக்கு நோக்கிய வாயிலையுடையதாக அமைந்துள்ளது.

ஆகமமரபுக்குட்பட்ட முறையில் அமைந்து விளங்கும் இவ்வாலயம் கருவறைக்குள் நிமிர்ந்து காணப்படும் கருநாகச் சிலை வடிவமும் அதன் கீழ் உள்ள அழகிய பீடத்தில் பிரதிஷ;டை செய்யப்பட்டிருக்கும் அருவுருவடிவமான அம்பாளின் திருவுருவும் சுயம்புருவங்களாகவே உள்ளன.

அம்பாளின் காற்சிலம்வு விழுந்த புவனேஸ்வரி பீடமாக இவ்வாலயம் கருதப்படுகின்றது. நாகபாம்பு பூக் கொண்டு வந்து பூஜித்த வழிபாட்டுச் சிறப்புமிக்க தலமாக இது விளங்குகின்றது. வரலாற்றுப் பெருமையும், வழிபாட்டுச் சிறப்பு மிக்க தலமாக இது விளங்குகின்றது. வரலாற்றுப் பெருமையும், வழிபாட்டுச் சிறப்பு மிக்க இவ்வாலயம் அந்நியர் ஆட்சிக் காலத்தில் அழிக்கப்பட்டிருக்கவேண்டும். அதன்பின்னர் இவ்வாலயம் இராமலிங்கம் இராமச்சந்திரர் என்பவரால் 1788இல் கல்லுக்கட்டிடமாகக் கட்டப் பெற்றது. 1935ஆம் ஆண்டு கிழக்கு வாயில் இராஜகோபுரம் கட்டப்பட்டது. இவ்வாலயத்தின் விமானம் 1951ஆம் ஆண்டு அழகாக அமைக்கப்பட்டுள்ளது. வெளியில் நுழைவாயில் கிழக்கு நோக்கிய வாயிலையுடைய 108 அடி உயரமான நவதள நவகலச இராச கோபுரத்திற்கு 2012 ஆம் ஆண்டில் மகாகும்பாபிஷேக ம் நடைபெற்றுள்ளது.

இவ்வாலயத்தில் 1951, 1963, 1983, 1998, 2012ஆகிய ஆண்டுகளில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவிய காலங்களில் 1958, 1986ஆகிய ஆண்டுகளில் இவ்வாலயம் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியது.

இவ்வாலய மகோற்சவம் ஆனிப் பூரணையை தீர்த்தோற்சவமாகக் கொண்டு நடைபெறுவது வழக்கமாகும். ஆரம்பத்தில் பத்து நாட்களே மகோற்சவம் நடைபெற்றது. 1960ஆம் ஆண்டிலிருந்து பதினைந்து நாட்கள் மகோற்சவம் நடைபெறுகின்றது. இவ்வாலய வழிபாட்டு மரபுகளில் பூரணைதோறும் இடம் பெறும் ஸ்ரீசக்ரபூஜையும் திருமணம் மற்றும் குழந்தைப்பேறு என்பவற்றிற்காகச் செய்யப்படும் நாகசாந்தியும் நாகப் பிரதிஷ;டையும் முக்கியமானவையாக விளங்குகின்றன. இவ்வாலயத்தில் நித்திய அன்னதானம் 1.4.1998 முதல் நடைபெறுகின்றது. வன்னியும் வேம்பும் இவ்வாலயத்தின் தலவிருட்சங்களாக விளங்குகின்றது.

1986ஆம் ஆண்டு முதல் பன்னிரெண்டு பேர் கொண்ட அறங்காவலர் சபையினர் இவ்வாலயத்தை பரிபாலனஞ் செய்துவருகின்றனர்.

வீரகத்தி விநாயகர் கோயில்

நயினாதீவு 7ஆம் வட்டாரத்தில் கிழக்கு நோக்கிய வாயிலையுடையதாக செம்மணத்தும்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. பலநூறு ஆண்டு நயினாதீவில் வாழ்ந்த முடிநாதர் மரபில் தோன்றிய தையலியாசி எனும் பெண் வேதாரணியம் சென்று அங்கிருந்து ஒரு விநாயகரை நயினா தீவுக்குக் கொண்டு வந்தார். இவ்விநாயகர் சிலை நம்பிபுலம், நடுவகாடு, மூத்தனார் கோயில். பிள்ளையார் புலர் ஆகியஇடங்களில் வைத்து வழிபடப்பட்டு வந்தது. இச்சிலையே சுமார் 300 வருடங்களுக்கு முன் செம்மணத்தம்புலத்தில் நிலையான ஓர் ஆலயம் அமைந்து வழிபாடாற்றப்பட்டு வருகின்றது. அதன் பின் 1918 ஆம் ஆண்டு புதியவிநாயகர்சிலை ஸ்தாபிக்கப்பட்டது. 1931ஆம் ஆண்டில் இருந்து அலங்காரத்திருவிழா நடைபெற்றது.

1952ஆம் ஆண்டு தொடக்கம் மகோற்சவ விழா சித்திரை மாதத்தில் நடைபெறுகின்றது 1972 இல் அழகிய சித்திரத் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. ஆலய சுற்றுப் பிரகாரத்தில் 32 விநாயகருக்கு படிமங்களைக் கண்டு தரிசிக்கலாம். இவ்வாலயத்தில் 1918, 1947, 1968, 1982, 1999 ஆகிய ஆண்டுகளில் மஹாகும்பாபிஷேக இடம் பெற்றுள்ளது எளிமையான வர்ணங்கள் பூசப்பட்டுள்ள ஓர் அழகிய ஆலயமாக இக்கோயில் திகழ்கின்றது. மருதமரம் இவ்வாலயத்தின் தலவிருட்சமாக கருதப்படுகின்றது. நயினாதீவுச் சுவாமிகள் இப் பழைய மரத்தின்கீழ் அமர்ந்தே பல ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வீரபத்திரசுவாமி ஆலயம்

நயினாதீவு நான்காம் வட்டாரத்திலுள்ள தம்பகைப்பதியில் கிழக்கு நோக்கிய வாயிலையுடையதாக ஸ்ரீ பத்திரகாளி உடனுறை வீரபத்திரசுவாமி ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமையுடைய இவ்வாலயம் ஆரம்பத்தில் 'வீரபாகு கோயில்' என்றும் 'இளைய பண்டாரம்' கோயில் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. வீரபாகு என்ற பெயருடன் நயினாதீவில் சிலர் வாழ்ந்த வருவதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஆரம்பகாலத்தில் இக் கோயிலுக்குள் வாளும், வேலும் வைத்தே வழிபாடு நடைபெற்றது. 1931ஆம் ஆண்டு இடம்பெற்ற மகாகும்பாபிஷேகத்தின் பின்னரே இக்கோயில் வீரபத்திரர் கோயில் என்று அழைக்கப்படுகின்றது. கந்தபுராண படனம் சிறப்பாக நடைபெற்று வந்த இக்கோயிலில் வருடம் தோறும் வரும் வைகாசி விசாகத்தன்று நடைபெறும் 'வேல்பூசை' என்று கூறப்படும் 'பெரும் பூசை, அன்னதானப் பெருவிழாவாக நடைபெறுவது குறிப்பிடற்பாலதாகும். ஆகமமுறைப்படி அமைந்து விளங்கும் இவ்வாலயத்தில் 1983ஆம் ஆண்டு முதல் பத்து நாட்கள் மகோற்சவம் நடைபெற்று வருகின்றது. 1933, 1954, 1981, 1997, 2011 ஆகிய ஆண்டுகளில் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்ற இவ்வாலயத்தில் ஆலமரமும் வில்வமரமும் தலவிருட்சங்களாக விளங்குகின்றன.

வேள்விநாயன் கோயில்

நயினாதீவு 2ஆம் வட்டாரத்தில் கிழக்கு நோக்கிய சிறிய கோயிலாக இக்கோயில் விளங்குகின்றது. இக் கோயிலை வெளியில் நாயன் கோயில் என்றும் வெளியில் நாகம்;மாள் கோயில் என்றும் அழைப்பர். இந்திரன் கோயில் என்றும் வழங்குவர். இந்திரனிடமுள்ள குலிசம் (வச்சிரம்) இக்கோயிலில் வழிபாட்டிற்குரிய புனிதப்20 டிபா‹Éர்h áற¥ò மல® - 2012 பொருளாக விளங்குகின்றது. வருடம் தோறும் பொங்கல் வழிபாடு நடைபெறுகின்றது. தற்போது இக்கோயில் புதிதாக அமைக்கப்பட்டு நித்திய பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

முருகமூர்த்தி கோயில்

முருகமூர்த்தி கோயில் நயினாதீவு 2ஆம் வட்டாரத்தில் உள்ள இரட்டங்காலி எனும் காணியில் அமைந்துள்ளது. கிழக்குநோக்கிய வாயிலையுடைய இக்கோயில் சுமார் 350 வருடப் பழமையுடையது. மூலஸ்தானத்தில் வேல் பிரதிஷ;டை செய்யப்பட்டிருக்கின்றது. 2011இல் நடைபெற்ற மகாகும்பாபிஷேகத்தில் ஆறுமுகசுவாமியின் திருமேனி எழுந்தருளி மூர்த்தியாக வைக்கப்பட்டுள்ளது. கந்தபுராண படனம் சிறப்பாக நடைபெற்ற கோயிலில் இதுவும் ஒன்றாகும். மணிக்கூட்டுக் கோபுரத்துடன் விளங்கும் இக் கோயில் புதுப்பொலிவுடன் தற்போது விளங்குகின்றது. நித்திய பூசைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. ஆலமரம் இக்கோவிலின் தல விருட்சமாகும்.

காட்டுக்கந்தசாமி கோயில்

நயினாதீவு 4யு வட்டாரத்தில் நடுவகாடு என்னும் காணிப்பகுதியில் கிழக்கு நோக்கிய வாயிலையுடையதாக இவ்வாலயம் அமைந்துள்ளது. சுணல் சுவாமியார் என்று அழைக்கப்பட்ட ஆறுமுகம் காணபதிப்பிள்ளை என்பவர் இக்கோயிலை ஸ்தாபித்தார். நாற்புறமும் சுற்றுமதில்களுடன் விளங்கும் இவ்வாலயக் கருவறைக்குள் 'வேல்' பிரதிஷ;டை செய்யப்பட்டுள்ளது. இவ்வாலயத்தல விருட்சம் அரசமரமாகும். வருடந்தோறும் வரும் கந்தசட்டி நாட்களில் அலங்காரத் திருவிழா நடைபெறும். இங்கு நடைபெறும் சூரன்போர் விழாவும், திருக்கல்யாண விழாவும் தனிச்சிறப்புடையவை ஆடிவேல் விழா திருவோரை நட்சத்திரத்தில் சிறப்பாக நடை பெறுகின்றது. இக்கோயிலை மேலும் வளம்படுத்தும் நோக்கில் திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிடாரி அம்மன் கோயில்

பிடாரி அம்மன் கோயில், நயினாதீவு 7ஆம் வட்டாரத்தில் தென்மேற்கேயுள்ள தில்லைவெளி என்னும் காணியிலே கடற்கரையோரத்தில் கிழக்கு நோக்கியதாக அமைந்துள்ளது. சிறுகோயிலாக விளங்கும் இவ்வாலயக் கருவறைக்குள் கடல் வழியாக மிதந்து வந்த பிடாரி அம்பாளின் சிலை பிரதிஷ;டை செய்யப்பட்டுள்ளது. முக்கோணவடிவத்துள் அமைந்துள்ள பேச்சி அம்மன் உருவமும் கருவறைக்குள் காணப்படுகின்றது. பூசரசு மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டு விளங்கும் இவ்வாலயத்தைப் பேச்சி அம்மன் ஆலயம் எனவும் அழைப்பர். வருடந்தோறும் வைகாசி மாதத்தில் பொங்கல் மற்றும் மடைபரவி வேள்வி நடைபெறும். சுமார் 300 ஆண்டுகள் பழமையுடைய இக்கோயிலில் ஆரம்பகாலத்தில் ஆடுவெட்டிப் பலியிட்டு வேள்வி நடைபெற்றது. 1943ஆம் ஆண்டின் பின்னர் இத்தகைய பலியிடும் வழக்கம் முற்றாக நிறுத்தப்பட்டு அதற்குப் பதிலாக நீத்துப் பூசணிக்காயை வெட்டிப் பலியிடும் வழக்கம் இருந்து வருகின்றது. தீராத நோய்களைத் தீர்த்தருளும் தெய்வம் என்ற நம்பிக்கையில் அடியார்கள் தமது நேர்த்திக் கடனுக்காக ஆடுகளையும், சேவற்கோழிகளையும், காணிக்கையாகச் செலுத்தி வருகின்றனர். இவ்வாலய முன்மண்டபத்தூண்களில் அஷ;டகாளி மாதாஹ்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன. 1988இல் ஆரம்பிக்கப்பட்ட நயினை ஸ்ரீ பிடாரி அம்பாள் அன்னதானசபை வேள்வித்தினத்தன்று அடியார்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றது நயினாதீவு ஸ்ரீ பிடாரி அம்பாள் சனசமூக நிலையத்தினர் ஸ்ரீ பிடாரி அம்பாளின் வேள்வித் தினத்தில் சமய அறிவுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பும் கலை, நிகழ்ச்சிகளும் கடந்த 21 ஆண்டுகளாய்ச் செய்து வருகின்றனர்.

காளி அம்மன் கோயில்

காளி அம்மன் கோயில், நயினாதீவு 5ஆம் வட்டாரத்தில் பிரண்டைக்காடு என்னும் காணியில் கிழக்கு நோக்கிய வாயிலை உடைய காணியில் கிழக்கு நோக்கிய வாயிலை உடையதாக விளங்குகின்றது. சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலை விஸ்வகுலமக்கள் நன்கு பரிபாலனம் செய்துவருகின்றனர். இக் கோயிலில் காணியின் எழுந்தருளி மூர்த்தியும் பிரதிஷடை செய்யப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் அலங்காரத் திருவிழா இக்கோயிலில் சிறப்பாக நடைபெறுகின்றது.

மீனாட்சி அம்மன் கோயில்

நயினாதீவு 7ஆம் வட்டாரத்தில் விவசாயிகளின் செழிப்புத் தெய்வமாக கிழக்கு நோக்கிய வாயிலையுடையதாக மீனாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. தலவிருட்சம் மருதமரமாகும். நித்திய பூசைகள் சிறப்பாக நடைபெற்றுவந்த இக்கோயில் தற்போது பாலஸ்தாபனம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஐயனார் கோயில்

நாகபூஷணி அம்பாள் ஆலயத்தின் வடக்கே காவல் தெய்வமாக ஐயனார் கோயில் அமைந்துள்ளது. புராணமான இக்கோயில் சிலப்பதிகார செட்டியார் காலத்தது என்று கருதப்படுகின்றது. சித்திரைமாதப் பூரணைத்தினத்திலே இக்கோயில் கந்தபுராண படனமும் கஞ்சிவார்த்தலும் தொன்று தொட்டு நடைபெற்று வரும் வழிபாடாக இருந்தது. இக்கோயில் தற்போதய கட்டிடம் சுமார் 300 வருடப் பழமையுடையது. இவ்வாலயத் தலவிருட்சமாக ஆலும் அரசும் விளங்குகின்றன.

மலையில் ஐயனார்.

நயினாதீவின்; 8ம் வட்டாரத்தில் மலையில் புலத்தில் காவல் தெய்வமாக கிழக்கு நோக்கியதாக இக் கோயில் விளங்குகின்றது. கருவறைக்குள் வேல் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலை மலையில் நாயனார் எனவும் வழங்குவர். இக்கோயிலில் ஐயப்ப சுவாமிக்குத் தனியான சந்நிதி உண்டு ஐயப்பசுவாமி வழிபாடு இக்கோவிலில் சிறப்புற நடைபெற்று வருகின்றது. ஆலும் பூவரசும் தலவிருட்சங்களாக உள்ளன.

வைரவர் ஆலயங்கள்

நயினாதீவில் சிவாலயம் இல்லாமல் இருக்கின்றபோதும் சிவமூர்த்தங்களான வீரபத்திரர், வைரவர் என்போருக்கான கோயில்கள் காணப்படுகின்றன. நயினாதீவு நான்காம் வட்டாரத்திலும், ஐந்தாம் வட்டாரத்திலும், ஆறாம் வட்டாரத்திலும், ஏழாம் வட்டாரத்திலும் ஞான வைரவருக்குத் தனியான சிறு ஆலயங்கள் காணப்படுகின்றன. நயினாதீவு பிரதேச வைத்தியசாலை வளாகத்திpனுள்ளும் கிழக்கு நோக்கிய வாயிலையுடைய ஞானவயிரவர் ஆலயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமாதிக் கோயில்

ஸ்ரீமத் முத்துக்குமாரசுவாமிகள் என்று அழைக்கப்படும் நயினாதீவுச் சுவாமிகளின் சமாதிக் கோயில் காட்டுக்கந்த சுவாமியார் கோயிலின் மேற்குப் பக்கத்தில் மேற்குநோக்கிய நுழை வாயிலை உடையதாக அமைந்துள்ளது. 1986இல் ஆறுமுகம் பார்வதி தம்பதியினருக்கு பிள்ளையாகத் தோன்றிய நயினாதீவு சுவாமியார் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் 26.1.1949இல் இருந்தபடியே மகாசமாதி நிலை எய்தினார். அந்த மகாஞானியின் சமாதி கிழக்கு நோக்கியதாகவே அமர்ந்த நிலையிலேயே வடிவேற் சுவாமிகளின் திருமுன்னிலையில் நயினையில் வைக்கப்பட்டுள்ளது. நித்திய பூசை நிகழும் சமாதிக் கோயில் நாற்புறமும் வாயில்; உள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது. சாதி மேடைமேல் சோமாஸ்கந்த மூர்த்தியின் திருவுருவம் பிரதிஷ;டை செய்யப்பட்டுள்ளது. சுவாமிகள் வணங்கிய சிறுசிவலிங்கம், நடேசர் என்பனவும் அம்மேடையில் உள்ளன. இச்சமாதி ஆலயமுன்றலில் தலவிருட்சமாக உள்ள அரசும் வேம்பும் பின்னிப்பிணைந்த நிலையில் காணப்படுகின்றது. போற்றுதலுக்கும் வழிபாட்டுக்கும் உரிய ஞானியாக நயினாதீவு ஸ்ரீமத் குத்துக்குமாரசுவாமிகள் விளங்கினார் என்பது இன்று பலருக்கும் தெரியாததாகவுள்ளது.

நாகதீபராஜ மகாவிகாரை

இலங்கையில் பௌத்தசமயத்தின் புராதன புனித வழிபாட்டு;த் தலங்களுள் ஒன்றாக நயினாதீவு, 2ஆம் வட்டாரத்திலுள்ள நாகதீப விகாரை விளங்குகின்றது. புத்தபகவானின் இரண்டாவது இலங்கைப் பயணம் இடம்பெற்ற புனித பூமியாக நயினாதீவு (மணிநாகதீவு) கருதப்படுகின்றது. புத்தபகவான் புத்தர் நிலை எய்திய ஐந்தாம் ஆண்டில் குளோதர, மகோதர என்றும் இரண்டு நாக அரசர்களுக்கிடையில் ஏற்பட்ட கடும்போரை விலக்க, மணிநாகதீபத்திற்கு விஐயம் செய்தார் என்று கூறப்படுகின்றது. ஆரம்பத்தில் பௌத்தகோயில் இருந்த 'சந்தனை' என்னும் காணியில் 1950ஆம் ஆண்டில் பௌத்தமடம் ஒன்று அமைக்கப்பட்டது. வணக்கத்திற்குரிய றன்தோபே சோமசிறி திஸ்ஸ அவர்கள் நயினாதீவின் பிரதானவீதி ஓரத்தில் ஒரு காணியை வாங்கி தற்போதுள்ள கோயிலை 1939- 40இல் அமைத்தார். அதன்பின்னர் 1946ஆம் ஆண்டளவில் வணக்கத்திற்குரிய பிராக்மணவத்தே பண்டித தர்மகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரோ அவர்கள் இக்கோயிலுக்கு வந்தார். 1947ஆம் ஆண்டில் விகாரை கட்டப்பட்டது 1954ஆம் ஆண்டில் பர்மாவில் இருந்து கொண்டு வரப்பட்ட புத்தர் சிலை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது தற்போது வணக்கத்திற்குரிய நவதகல பதுமகீர்த்தி திஸநாயக்கதேரோ அவர்கள் இவ்விகாரையை சிறப்பாகப் பரிபாலித்து வருகின்றார். நாள்தோறும் பலர் வந்து வழிபடும் பௌத்த வணக்கத்தலமாக இவ்விகாரை விளங்குகின்றது. பழைய பௌத்த விகாரை நயினாதீவு முதலாம் வட்டாரத்தில் காணப்படுகின்றது.

இஸ்லாமியப் பள்ளிவாசல்

இந்தியாவில் கீழ்க்கரைப் பகுதியிலிருந்து 1915ஆம் ஆண்டளவில் நயினாதீவுக்கு வருகைதந்த முஸ்லீம் மக்கள் தமது வணக்கத்திற்குரிய தலமாக நயினாதீவு ஆறாம் வட்டாரத்தில் கிழக்கு கடற்கரை அருகில் ஒருசிறிய பள்ளிவாசலை அமைத்தனர். இப்போதிருக்கும் பள்ளிவாசல் 1919இல் அமைக்கப்பட்டுள்ளது. அருகில் 1923இல் அமைக்கப்பட்ட அம்மா பள்ளிவாசல் காணப்படுகின்றது. இலங்கையில் இஸ்லாமியர்களுக்குரிய புனித வழிபாட்டுத்தலங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

கிறிஸ்தவ ஆலயம்

நயினாதீவில் மானிக்கரை என்னும் காணியில் கிறிஸ்தவ குருமார் தங்கியிருப்பதற்கு 1890 ஆம் ஆண்டளவில் ஒரு வீடு அமைக்கப்பட்டது. பின்னர் பள்ளிக்கூடமும் அமைக்கப்பட்டது. மடமும் வழிபாட்டுக்கென அமைக்கப்பட்டது. இதனை அமைத்தவர்கள் அமெரிக்க திருச்சபையைச் சேர்ந்த புரட்டஸ்தாந்து மதத்தின. தென்னிந்திய திருச்சபையினர் சார்பில் நயினைதீவு 7ம் வட்டாரத்தில் மேற்குக் கடற்கறையில் சிறிய அந்தோனியார் ஆலயம் ஒன்று காணப்படுகின்றது. பெனடிக் கோஸ் பிரிவினரும் தமது வணக்கத்திற்காக 7ம் வட்டாரத்தில் சிறிய ஓர் ஆலயம் அமைந்து வழிபட்டு வருகின்றனர்.

நிறைவுரை
இவ்வாறாக நயினாதீவு இந்து, பௌத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயங்களின் வழிபாட்டுத் தலங்களைத் தன்னகத்தே கொண்டே சர்வ சமய சந்நிதியாக விளங்குகின்றதென்பதும் சமய சமரசம் நிலவும் இப்புண்ணிய பூமி எதிர்காலத்தில் சர்வசமயிகளின் யாத்திரைத் தலமாகவும் சமயச் சுற்றுலா மையங்களில் ஒன்றாகவும் விளங்குமென்பதும் தெளிவாகத் தெரிகின்றது.

Posted on 18/11/14 & edited 02/04/15 @ Nainativu, LK