5. பொம்மை நல்ல பொம்மை

பொம்மை நல்ல பொம்மை
புதிய கரடிப் பொம்மை
அம்மா தந்த பொம்மை
அழகு மிக்க பொம்மை

சாவி கொடுத்தால் ஆடும்
தாளம் மெல்லப் போடும்
காவிச் சட்டை உடம்பில்
கண்ணில் மணி மின்னும்

நாலு சில்லில் ஓடும்
நன்கு சுழன்றாடும்
காலிரண்டும் ஆட்டிக்
கரணம் போடும் பொம்மை

Posted on 11/12/12 & edited 03/04/15 @ ,