4. குட்டி ஆடே .......

குட்டி ஆடே குட்டி ஆடே
இங்கே ஓடி வா - உந்தன்
குரலைக் கேட்டு ஓடி வாறேன்
இங்கே ஓடி வா

கட்டி அம்மா போடும் முன்னே
இங்கே ஓடி வா - நல்ல
கதைகள் எல்லாம் சொல்லித் தாறேன்
இங்கே ஓடி வா

துள்ளித் துள்ளிக் கரணம் போட்டு
இங்கே ஓடி வா - உன்னைத்
தூக்கித் தூக்கி முத்தம் தாறேன்
இங்கே ஓடி வா.

Posted on 11/12/12 & edited 03/04/15 @ ,