3. வள் வள் நாய்க்குட்டி

வள் வள் நாய்க்குட்டி
வாலைஆட்டும் நாய்க்குட்டி
செல்லமான நாய்க்குட்டி
சின்ன வெள்ளை நாய்க்குட்டி

பந்தை எறிந்தால் ஓடும்
பாய்ந்து வாயில் கெளவும்
எந்த னோடு கூடி
என்றும் விளையாடும்

பூனைக் குட்டி யோடு
போடும் செல்லச் சண்டை
ஆனால் நாயைக் கண்டால்
அது குரைக்கும் வள்வள்.

Posted on 11/12/12 & edited 03/04/15 @ ,