2. வட்ட வட்ட நிலாவே

வட்ட வட்ட நிலாவே
வானில் ஓடும் நிலாவே
கிட்ட ஓடி வா வா
கிண்ணப் பாலைத் தருவேன்

ஓடி வா வா நிலாவே
ஒளிந்திடாதே முகிலில்
ஆடி வா வா நிலாவே
அம்பி விளையாட

கையைக் கையை ஆட்டிக்
கண்ணன் அழைக்கின்றான்
மெய்யாய் ஓடி வா வா
விரும்பி விளையாட.

Posted on 11/12/12 & edited 03/04/15 @ ,