13. குட்டிக் குரங்கு

குட்டிக் குரங்கொன்று
கொண்டொருவன் வந்தான்
சட்டையெல்லாம் போட்டோர்
சங்கி லியிற் கட்டி

வாலைப் பின்னால் நீட்டும்
வளைத்து விலாச் சொறியும்
கோலை வீசி விட்டோர்
கும்பிடுவும் போடும்

தோளில் தடி வைத்துத்
துள்ளித் துள்ளிக் குரங்கு
காவடிதான் ஆடக்
கண்டு மெய்த்தார் மக்கள்

ஆட்டமது முடிய
அது ஒர்தட்டு ஏந்தப்
பார்த்தவர்கள் எல்லாம்
பணத்தைப் போட்டுச் சென்றார்.

Posted on 11/12/12 & edited 03/04/15 @ ,