10. தவளையார்

தத்தித் தத்தி வெளியிலே
தவளையாரும் வருகிறார்
முட்டை போலக் கண்களால்
முளிசி முளிசிப் பார்க்கிறார்

பூச்சி ஒன்றைப் பார்க்கிறார்
பொல்லா நாக்கை நீட்டிறார்
நாக்கில் ஒட்டிக் கொண்டதும்
நன்கு வாயில் போடுறார்

துள்ளி நீரில் பாய்கிறார்
துணிவாய் நீந்திப் போகிறார்
மெல்லக் காலை நீட்டியே
வேகமாகச் செல்கிறார்.

Posted on 11/12/12 & edited 03/04/15 @ ,