8. நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க . .


நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார் சொற் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோ (டு)
இணங்கி இருப்பதுவும் நன்று.

நல்லாரைக் காண்பதுவும் நன்றே - நல்லவர்களைக் காணுவதும் நல்லதே, நல்லார் நலம்மிக்க சொற் கேட்பதுவும் நன்றே - நல்லவர்கள் கூறும் பயனுடைய சொற்களைக் கேட்பதுவும் நல்லதே, நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே - நல்லவர்களுடைய நற்குணங்களைப் பாராட்டிக் கூறுவதும் நல்லதே, அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று - அந்த நல்லவர்களோடு கூடி நண்பர்களாக வாழ்வதுவும் நல்லதேயாகும்.

Posted on 26/12/12 & edited 26/12/12 @ ,