28. சந்தன மென்குறடு தான் தேய்ந்த காலத்தும் . .


சந்தன மென்குறடு தான் தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபாடா (து)ஆதலால் - தந்தம்
தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்
மனம் சிறியர் ஆவரோ மற்று.

மென் சந்தனக் குறடு - மென்மையான (நறுமணம் வீசும்) சந்தனக் கட்டையானது, தான் தேய்ந்த காலத்தும் கந்தம் குறைபடாது - மிகவும் தேய்ந்து மெலிந்த வேளையிலும் தன்னிடமுள்ள வாசனையிலே சிறிதும் குறைவு படாது, ஆதலால் - ஆதலினாலே, தார் வேந்தர் கேட்டால் தம்தம் தனம் சிறியர் ஆயினும் - சேனைகளை உடைய அரசர்கள் நேர்ந்த கேட்டினாலே தங்கள் தங்கள் செல்வத்திற் குறைந்து போனாலும், மனம் சிறியர் ஆவரோ - அவர்களது உள்ளம் கொடைக் குணத்திற் சிறிதும் குறைந்துவிடாது.
குறள் - குறுகியது
குறடு - கட்டை
கந்தம் - நறுமணம்
தனம் - செல்வம்

Posted on 26/12/12 & edited 26/12/12 @ ,