வறுமையின் எல்லை

அடுப்படியில்
இளம் சூடு இன்றி
அந்த பூனை கூட
அடுத்த வீட்டில்
அடைக்கலம் ஆகிவிட்டது

மடிப்பு இடையில்
இளைய பிள்ளை இருந்து
அம்மா பசிக்குதென்று
அழுதழுது கேட்டுவிட்டு
அயர்ந்து மயங்கிவிட்டது

அடி வயிற்றுள்
அடுத்த பிள்ளை துடித்து
அம்மா நானும் வருகின்றேன்
அடுத்த வேளை உணவுக்காய்
அவனியில் போராட என்கிறது

துடிப்பு இழந்தும்
துயரத்திலும் பாசமாய்
தம்பியை தூக்கியபடி
மூத்த பிள்ளை முகத்திலும்
சோகம் நிழலாடுது

இடுப்பொடிய கல்லுடைத்தும்
கை சிவந்து கறுத்தும்
கணவன் கூலி இன்றி வந்து
கை விரித்து கண்ணீர் விட்டு
கதறி கதறி அழுகின்றான்

என்ன இந்த பூமி
ஏமாற்றும் மனிதர்களோடு
ஏழைகளாய் நாம்
ஏன் பிறந்தோம் சாமி
என்று கேட்கிறது மனது

நல்லதங்காள் கதை கூட
நல்லதை உலகிற்கு
சொல்லவே இல்லை
இல்லை என்று கேட்போர்க்கு
இன்றுவரை உதவ யாருமே இல்லை

வறுமையின் எல்லை என்று
எதை சொல்ல ,,ஏமாற்றும்
கல்லை ஒத்த மனம் படைத்த
மனிதர்கள் வாழும் உலகில்
அவர்களுக்கு தொல்லை என்று
வாழும் நிலை வேண்டாம் ,,இனி
இரப்பதற்கு இவ்வுலகில் ,,நாம்
இல்லை என்று சொல்லி விட்டு
போய் வருகின்றோம் ,,,,,நன்றி ,,,,
உள்ள அந்த நாய் மட்டும் இன்றும் எங்கள் பின்னால் வருகிறது

Written by: 
Posted on 09/03/14 & edited 31/03/15 @ ,