யாதுமாகி நின்றாய்

அன்பைக் காட்டிய அறிவுடை ஆசான்
   ஆற்றலில் மிக்க நேரிய பண்பினன்
இனிமை சேர் குரலால் இலங்கிய இனியவன்
   ஈதலில் சிறந்த சீரிய சிந்தையன்
உளம் முழுதாண்ட உத்தம சீலன்
   ஊரார்க் குதவிடும் ஊன்றுகோலானவன்
எண்ணிய எண்ணியாங்கு எய்திய தவத்தினன்
   ஏழையர் உறுந்துயர் துடைத்திடும் தூயவன்
ஐயந் திரிபறக் கற்பித்த கற்றவன்
   ஒன்றும் புரிந்திடாக் குழந்தையைப் போன்றவன்
ஒளவியம் அறிந்திடா அருங்குணக் குன்றவன்
   எஃகினைப் போன்றதோர் மனத்தை உடையவன்
மனிதம் பேணிய மாமனி தன்இவன்
   அன்னவன் இன்றிலை எனும் துயர் தந்தவன்
நாகபூஷணி பதம் நாடிய வித்துவான்.

ஆக்கம்: திருமதி மகேஸ்வரி சதானந்தன்

Posted on 12/02/13 & edited 03/04/15 @ Nainativu, LK