சிந்தனை நிந்தன் திருமலர் அடிக்கே

பாரகம்     முழுவதும்     பசிப்பிணி     அறுக
   சீரொடு     ஆதிரை     இவ்வணம்     வாழ்த்திய
பேரொடு     அமுத     சுரபியைத்     தந்த
   ஊரதாம்     நயினா     தீவெனும்     பதியில்
அறிவுப்     பசியினை     ஆற்றிடும்     பணியில்
   'ஆற்றல்     சுரபி' யாய்     இருந்தவர்     அணியின்
நெறியினில்     வித்துவான்     குமாரரும்     ஒருவர்
   நெஞ்சில்     நிறைந்த     குருவுமாய்     இருந்தார்
கல்வி     சொல்லும்     கலையினில்     தேர்ந்தவர்
   கன்னித்     தமிழின்     காதலில்     மிக்கவர்
பலவித     மான     கலைகளில்     வித்தகர்
   பள்ளி     மாணவர்     உள்ளத்     துறைந்தவர்
அள்ளித்     தந்து     அறிவாம்     புனலை
   அருந்தச்     செய்தெம்     ஆற்றலை     வளர்த்தவர்
சொல்லில்     வல்லவர்     சொல்லிய     வாறே
   சொற்றிறம்     பாது     சொன்னவை     முடித்தவர்
பேரறி     வாளன்     இவரின்     ஊற்றில்
   பீடும்     பெருமையும்     பெற்றிட     மூழ்கியோர்
ஊரறி     அறிஞராய்     உபாத்தி     யாயராய்
   உயர்பொறி     இயலராய்     மருத்துவர்     தாமாய்
நேரென     நின்றார்     நிரம்பினோர்     எமதூர்
   நித்தில     மணிகளாய்     நித்தமும்     நின்றார்
சீரொடு     பொலி     சிறப்புடைக்     குமரா
   சிந்தனை     உந்தன்     திருமலர்     அடிக்கே.

நயினை அமரர் வித்துவான் சி. குமாரசாமி அவர்களின்
கல்விப் பணியைத் தலைமேற்கொண்ட நயினாதீவு ஆசிரியர்கள்.

Posted on 17/01/13 & edited 03/04/15 @ Nainativu, LK