எழில் நகர் திருமலை

திரிமலையில் ஒரு மலையாம்
   திருமலை அதன் பெயராம்
திரிமலையின் எழில் கண்டால்
   திகைப்பாராம் பிறநாட்டார்

திங்களும் தன் ஒளியைத்
   திருமலைக்கே கொடுத்திடுமாம்
திசைதிருப்பு மகாவலியும்
   திருமலையுட் சென்றிடுமாம்

திக்கெட்டும் புகழ்பரப்பித்
   திருமலையின் எழிலை மெருகூட்டவென
திருக்கோணநாதரும் கவிபாடி மயிலாடத்
   திகில் கொண்டு திகழ்வாராம்

திகைப்பூட்டும் கன்னியா வெந்நீரூற்றும்
   திகிலூட்டும் இராவணனின் மலைவெட்டும்
திகழ்கின்ற எழில் நகர்
   திருமலை எனும் நகராம்

ஆக்கியவர்: நயினை நங்கை

Posted on 26/12/12 & edited 31/03/15 @ Nainativu, LK